தல தளபதி ரசிகர்களுக்கு கிரிக்கெட் வீரர் அஸ்வின் அறிவுரை !

சினி நியூஸ் சினிமா புகார் பெட்டி விளையாட்டு

ajith - 2026
சமூக வலைத்தளங்களில் பிரபல நடிகர்களின் ரசிகர்கள் என்ற பெயரில் பலரும் பல கேவலமான, மோசமான செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். நேற்றுமுன்தினம் டுவிட்டரில் நடந்த ‘ஹேஷ்டேக்’ சண்டை போல இதுவரை நடந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.vijay - 2026திடீரென டுவிட்டரில் “#RIPactorVIJAY” என்ற ஹேஷ்டேக் டிரென்டானது. யார் அதை ஆரம்பித்தார்கள் எனத் தெரியவில்லை. அப்படி ஒரு டிரென்டிங்கைப் பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். ஆனால், அது தொடர்ந்து டிரென்டிங்கிலேயே இருந்தது. அதன் பின்னர் அதற்கு பதிலடியாக ”ஆகஸ்ட்8_பாடைகட்டு” என்ற ஹேஷ்டேக் டிரென்டானது.
ajithvijay - 2026
விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இடையிலான உச்சகட்ட மோதலாக அது மாறியது. அதற்கடுத்து “LongLiveVijay”, “IgnoreNegativity” ஆகியவை டிரென்டாக ஆரம்பித்தது. இதுநாள் வரையிலும் நடந்த டுவிட்டர் சண்டைகளைக் காட்டிலும் இந்த சண்டை நேற்று முன்தினமும், நேற்றும் மிக மோசமாக இருந்ததால் பலருக்கும் கோபம் வந்தது.
ajith vijay - 2026
அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ ஆகஸ்ட் 8ம் தேதி வருகிறது. விஜய் நடித்துள்ள ‘பிகில்’ படத்தின் சிங்கிள் பாடல் ‘சிங்கப் பெண்ணே’ வெளியானது. இதனால்தான் இருவரது ரசிகர்களும் இப்படி மோசமாக சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இருவரது ரசிகர்களும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவில்லை என்றால் இது இன்னும் மோசமாகத்தான் போகும்.
aswin - 2026
இதையடுத்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டவர்களும் சினிமா பிரபலங்கள் சிலரும் இப்படி சண்டை போட்டுக் கொள்வதை வன்மையாகக் கண்டித்தார்கள்.

சில நாட்களுக்கு முன்பு எங்கள் கிரகத்தைத் தாக்கிய ஒரு சிறுகோள் இருந்தது, ஒழுங்கற்ற பருவமழை வெவ்வேறு நகரங்களைத் தாக்கியது, நம் நாட்டின் பல பகுதிகளில் வறட்சி மற்றும் மிகவும் தொந்தரவான கிரிமினல் வழக்குகள் பேசப்படுகின்றன, ஆனால் நமது அருமையான மாநிலத்தின் இளம் தலைமுறை இந்த #RIPactorVIJAY ட்ரண்ட் ஆக்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.