வாகா எல்லையை மூடியது பாகிஸ்தான்!

இந்தியா உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

wagah border - 2026

வாகா எல்லையை பாகிஸ்தான் மூடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்த 370 பிரிவு இந்திய அரசால் திரும்பப் பெற்றுள்ள நிலையில், ஐநாவில் இந்தியா செய்த ஒப்பந்தங்களை இந்திய அரசு தற்போது மீறி உள்ளது என்றும், பல ஒப்பந்தங்களை தற்போது இந்தியா மீறி உள்ளது என்றும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், இந்தியா நேற்று பிறப்பித்த சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் இல்லையென்றால் இந்தியா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும்,  உடனே இந்தியா காஷ்மீரில் அனைத்து விதமான புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

இந்த நிலையில் புதிய திருப்பமாக காஷ்மீர் எல்லையை மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

அதாவது வாகாவில் இருக்கும் எல்லையை மொத்தமாக மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இனி இந்தியாவிற்கு பஸ் போக்குவரத்து உட்பட எந்த விதமான போக்குவரத்தும் கிடையாது என்றும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

முன்னதாக இந்தியாவுடன் தூதரக மற்றும் ராஜாங்க உறவுகளை நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்தது. தற்போது வாகா எல்லையையும் மூடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.