சொன்னதை செய்து காட்டியவர்!

உரத்த சிந்தனை
மோடி ஊசி

கடந்த வருடம் நவம்பர் மாதத்தில், ஆகஸ்ட் 2021க்குள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறியது மத்திய அரசு. கடந்த மார்ச் மாதம் முதல் பொது மக்களுக்கு இது வரை 13 கோடியே 55 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் 15 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும். இரண்டே மாதங்களில் 15 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கும் நிலையில், இதே சராசரியின் படி செலுத்தப்பட்டாலே, ஆகஸ்ட் இறுதிக்குள் 45 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கும்.

கடந்த வாரம் தடுப்பூசிகள் தயாரிப்பை வேகப்படுத்த ரூபாய் தடுப்பூசி நிறுவனங்களுக்கு ரூபாய் 4500 கோடியை முன்பணமாக மத்திய அரசு செலுத்தியிருப்பதோடு, ஸ்புட்னிக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கான அனுமதியையும் அளித்துள்ளது.

மேலும் விரைவாக இந்திய மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள் இந்திய மக்கள் அனைவருக்கும் வெகு விரைவிலேயே தடுப்பூசி செலுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு தொற்றினால் ஏற்படும் பாதிப்பு குறைவாகவே உள்ளது என்ற நிலையில், மருத்துவர்களும், சுகாதார பணியாளர்களும் மக்களுக்கு விரைந்து தடுப்பூசியை செலுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில், எதிர்க்கட்சியினர் தடுப்பூசி குறித்து மக்களிடையே அவநம்பிக்கையை விதைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு உற்சாகத்தை அளித்து நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அனைவரின் பொறுப்பும், கடமையுமாகும்.

  • நாராயணன் திருப்பதி. (பாஜக., செய்தித் தொடர்பாளர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.