பொது சிவில் சட்டம்
இந்தியா முழுவதும் பொதுவான சிவில் சட்டம் நடைமுறை படுத்த மத்திய அரசு உரிய முறையில் கருத்து கேட்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இஃது தற்போது உள்ள மத்திய ஆளும் கட்சியின் தேர்தல் அறிக்கையும் கூட…..
கடந்த ஆட்சி காலத்திலேயே அறிவிப்பு வெளியிடப்பட்டு கோவிட் உட்பட சில பல காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டவரைவை மீண்டும் நடைமுறை படுத்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இந்தியா ஓர் மத சார்பற்ற நாடு என்கிற கோட்பாடு சரி என்றால் தேசம் முழுமைக்கும் ஒரே சட்டம் என்பது தானே சரியானதாக இருக்க முடியும்..????? ஆனால் கூடாது என்கிறார்கள் சில குயுக்தவாதிகள்.
ஏனெனில் மதச்சிறுபாண்மையினராக உள்ள ஒரு சாராரை இது கடுமையாக பாதிக்கும் என அவர்கள் #நெம்புகிறார்களாம்…..😜 இது தான்… இந்த தேசம் தான் மதச்சார்பற்ற தேசமாயிற்றே… என்றால் அதற்கும் பொங்குகிறார்கள். சரி அப்படி என்றால் பெரும்பாண்மையினராக உள்ளவர்களின் இந்துக்கள் தேசம் என அறிவித்துவிட்டால்…. என்று கேட்டால்….. அவ்வளவு தான் வெந்தே போவார்கள்.
2010 வரை மாத்திரமே இருந்திருக்க வேண்டிய இட ஒதுக்கீட்டு சட்டமே இதோ இது நாள் வரை காலாவதியாகவில்லை….. கேட்டால் என்னமோ அவர்களின் பிறப்புரிமை என்பது போல் பிதற்றுகிறார்கள்…… ஓர் அடிப்படை விஷயம் ஒன்று இதில் உண்டு. மதம் மாறினாலேயே இட ஒதுக்கீடு அன்னவர்களுக்கு விலகி கொள்ளப்படுகிறது….. இங்கு அப்படியா நடக்கிறது.?????? கேள்வி
கேட்டால் இதற்கு பதில் இல்லை.
மிஷனரிகள் இதில் கில்லாடிகள்…… மதம் மாற்றம் வேண்டும்… ஆனால் அஃது வெளிப்படையாக கூடாது.வெளியே தெரியும் படி பாவாடையாக இருக்க வேண்டிய அவசியமில்லை….. உள்பாவாடையாக ., அதாவது அவர்களின் கிரியேட்டிவிட்டி பார்வையில் கிரிப்டோ கிருஸ்துவாகவே தொடரலாம் என்கிற சட்ட நுணுக்கங்களை அறிந்து சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அப்பாவி இந்துக்கள் இன்னமும் இது பற்றின கவலை இல்லாமல் இன்னமும் இந்த சட்டதிட்டங்களை அறிந்து கொள்லாமல் எதிர்க்கொண்டுயிருக்கிறார்கள். பைத்தியக்கார பித்துக்குளிகள்.
உதாரணமாக தெற்காசிய அளவில் மிகப் பிரசித்தி பெற்ற மருத்துவமனை #CMC என அறியப்படும் வேலூர் கிருஸ்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இது நாள் வரையில் கத்தோலிக்க திருச்சபை கிருஸ்துவர்களை தாண்டி வேறோருவரை மருத்துவம் பயில அனுமதித்ததில்லை என்று உச்ச நீதிமன்றத்திலேயே வெளிப்படையாக அறிக்கை தாக்கல் செய்யும் அளவிற்கு துணிந்திருக்கிறார்கள். இன்னமும் கூட அடாவடியாக நாங்கள் இந்திய அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல என்கிற அளப்பறை எல்லாம் செய்து கொண்டு இருந்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் தலையில் ஓங்கி குட்டுவைத்து அனுப்பி வைத்த பின்னர் கொஞ்சம் அடங்கி இருக்கிறார்கள்……….இதே புண்ணியவான்கள் தான் #NEET தேர்வினை எதிர்த்து முதன் முதலில் 2013 ஆண்டே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்கள். அதனை நிறுத்தி வைக்க காரணமாக இருந்தவர்கள். இது நாள் வரையில் அதாவது நீட் தேர்வு காட்டாயம் என ஆன பிறகு…. வேலூர் சிஎம்சியில் MBBS நடத்தாமல் நிறுத்தி வைத்து அழிச்சாட்டியம் செய்து கொண்டு வருகிறார்கள்….. இந்த ஆண்டு எப்படியோ தெரியாது.
ஆக
ஆக
ஆக
மதச்சார்பற்ற தேசத்திற்கு எதற்காக மதத்தின் பெயரால் இது போன்ற எண்ணற்ற அத்துமீறல்கள்…. அதுவும் சட்டத்தின் துணைக் கொண்டு…?????
இந்திய அளவில் இந்திய சட்டத்தை நம் தமிழகத்தில் உள்ளவர்கள் போல வேறு யாரும் கேலி செய்து இருக்கமுடியாது என்கிற நிலைமை இன்றளவும் நீடிக்கிறது….., அப்படி என்றால்… ஆம் இந்திய சட்ட வரைவில் முதன் முதலில் திருத்தம் கொண்டு வந்ததே நம்மவர்கள் தான் என்பது நம்மில் பலருக்கும் இன்று வரை தெரியாத ரகசியமாகவே இருக்கிறது.
இந்தியன் பீனல் கோட்……. இன்று வரை அது இங்கே கேலிக்கு உள்ளாக்கப்படுகிறது…. அமைச்சர் செந்தில் பாலாஜி விஷயம் வரைக்கும்….. ஹேபியஸ் கார்ப்பஸ்… அதாவது ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்து அலப்பறை கொடுத்து இருக்கிறார்கள் இங்கு உள்ள உன்மத்தம் கொண்டவர்கள்…,
ஆள் எங்கு இருக்கிறார் என்பதே தெரியாத சூழலில் தாக்கல் செய்யவேண்டிய மனுவை சட்ட மன்ற உறுப்பினர்கள் புடைசூழ படுத்து கிடக்கும் ஒருவருக்காக இவர்கள் இந்த மனுவை பதிந்திருக்கிறார்கள். அது தான் அப்படி என்றால்….. நீதிமன்ற வளாகத்தில் வைத்தே #41A எங்கே என கேள்வி கேட்டு கொண்டு இருக்கிறார்கள் ஒரு சாரார்.
IPC க்கும் #CrPC க்கும் வித்தியாசமே தெரியவில்லையே என அங்குள்ளவர்கள் தலைதலையாய் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழகத்தை தாண்டி இவ்வழக்கு வெளியே சென்றால் காறி உமிழ்வார்கள் இவர்களின் சட்ட ரீதியான நடவடிக்கைகளை பார்த்து…
மெட்ராஸ் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் திரு வரதராஜன் (நேதாஜி மக்கள் கட்சி நிறுவனர்) சொல்வது போல் இவரை விசாரணைக்காக டெல்லி வரவழைத்து அங்கு வைத்தே கைது நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்க வேண்டும் சம்மந்தப்பட்ட துறையினர் என்கிறார். கனிமொழி, ஆ.ராசா மற்றும் ப.சிதம்பரம் விஷயத்தில் இது தானே நடந்தது என சுட்டிக் காட்டுகிறார் இவர். நோட்டீஸ் அனுப்பவில்லை….. கொடுக்கவில்லை என்கிற வாதமும் அடிபட்டு போயிருக்கும்.
இன்றைய தேதியில் கழுவுற மீனில் நழுவுற மீனாக அமைச்சர் நகர்ந்து விட்டார்… அவ்வளவும் நடிப்பு என்பது எல்லோருக்கும் தெரியும் … ஆனாலும் ஒன்றும் பண்ண முடியவில்லை.நெஞ்சு வலி வந்த ஒருவரால் கைகளை தலைக்கு மேல் தூக்கிட முடியாது… கால்களால் எத்தமுடியாது… என்பது மருத்துவம் சார்ந்த அனைவருக்கும் நன்கு தெரியும்.
கைது நடவடிக்கை இல்லை…. ஆன போதிலும் நீதிமன்ற காவல் இருக்கிறது. மஹா சிக்கலான விஷயமாக மாற்றி இருக்கிறார்கள். மொத்தத்தில் விசாரணை வளையத்தில் இருந்து டிமிக்கி கொடுத்து விட்டார் அமைச்சர் அவ்வளவே….
நாடு முழுவதும் பொதுவான சிவில் சட்டம் வேண்டும் என்பது போலவே அடிப்படையான சட்ட சார்ந்த விஷயங்களை பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெறச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். பல தவறுகளை தடுக்க….. தடுத்து நிறுத்த இது உதவும்.
- ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்