க்ளாமராக நடிக்க ரெடி: நிரஞ்சனி அகஸ்தியன்!

சினி நியூஸ் சினிமா
niranjana - 2026

காதல் கோட்டை கட்டி தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மூன்றாவது மகள் நிரஞ்சனி. காஸ்டியூம் டிசைனர் இப்போது நிரஞ்சனியும் நடிகை ஆகிவிட்டார்.

சமீபத்தில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இரண்டாது நாயகியாக நடித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நடிக்கும் ஆசை எனக்கு இருந்தே இல்லை. விருப்பப்பட்டுதான் காஸ்ட்யூம் டிசைன் செய்தேன். சிகரம் தொடு, கற்றது களவு, காவியத் தலைவன், பென்சில், கதகளி, கபாலி உள்பட பல படங்களில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றினேன்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்குள் காஸ்ட்யூம் டிசைனரகத்தான் வந்தேன். “திமிரா ஒரு பெண்ணு வேணும். அதுக்கு நீங்கதான் சரியான ஆள்” என்று இயக்குனர் கூறி என்னை நடிகை ஆக்கிவிட்டார். இப்போது நடிப்பின் மீது ஆர்வம் வந்து விட்டது.

இனி நடிப்பில் தீவிரமாக கவனம் செலுத்துவேன். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் கொஞ்சம் கிளாமரான உடை அணிந்து நடித்தேன். இனியும் அப்படி நடிப்பேன் கதைக்கு தேவையாக இருந்தால். நடிப்பில் கவனம் செலுத்தினாலும் தொடர்ந்து காஸ்டியூம் டிசைனராகவும் பணியாற்றுவேன். என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.