கொரோனா இங்கே வராது: நித்தியின் நெத்தியடி!

பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
nithiyanata 3 - 2026

பரமசிவன் எங்களை பாதுகாப்பதால் கொரோனா வைரஸ் எங்களை தாக்காது என நித்தியானந்தா கூறியுள்ளார்.பல்வேறு வழக்குகளில் சிக்கி இருக்கும் சர்ச்சைக்குரிய நித்தியானந்தாவிற்கு, கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு போலீசார் தேடி வருகின்றனர்.

ஆனால், யார் கையிலும் சிக்காத நித்தியானந்தா, யூடியூப்பில் மட்டும் பக்தர்களுக்கு சொற்பொழிவு ஆற்றி வரும் அவர், தன் மீதான குற்றச்சாட்டுகளை கேலி செய்தும் வருகிறார். மேலும், தனித்தீவை வாங்கி ஸ்ரீகைலாசா என்ற நாட்டை உருவாக்குவதாகவும் அறிவித்திருந்தார்.

அந்நாட்டின் பிரதமர் என தன்னைத்தானே அறிவிக்கவும் செய்தார்.இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் நித்தியானந்தா வெளியிடப்பட்ட வீடியோவில் அவர் கூறுகையில், கொரோனா வைரஸால் நாங்கள் பாதிக்கப்படவில்லை.

பரமசிவன் எங்களை பாதுகாக்கிறார். காலபைரவர் எங்களுக்கு பாதுகாவலராக உள்ளார். இதனால், எதிர்காலத்திலும் எங்களுக்கு கொரோனா பாதிப்பு வராது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.