Homeசினிமாசினி நியூஸ்எஸ்பிபி உடல்நிலை குறித்து… மகன் சரண் வெளியிட்ட புதிய வீடியோ!

எஸ்பிபி உடல்நிலை குறித்து… மகன் சரண் வெளியிட்ட புதிய வீடியோ!

உடல்நிலை நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கிறது என்றும் அவரது மகன் எஸ்பிபி சரண் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு செய்தி பகிர்ந்துள்ளார்

cid1237310 - Dhinasari TamilwAAACH5BAEKAAAALAAAAAABAAEAAAICRAEAOw== - Dhinasari Tamil
cc4015f1c1da40647e7a51827562864f - Dhinasari Tamil

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை கடந்த 48 மணி நேரமாக மிகவும் சீராக இருக்கிறது என்றும் அவரது உடல்நிலை நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கிறது என்றும் அவரது மகன் எஸ்பிபி சரண் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு செய்தி பகிர்ந்துள்ளார்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள  பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னை, எம்ஜிஎம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ‘எக்மோ’ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அமெரிக்கா, இங்கிலாந்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனையுடன் எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு  தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் 

எஸ்பிபி உடல்நிலை குறித்து  அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறுகையில், ‘அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி வருகின்றன. நுரையீரல் பாதிப்பினை சீர் செய்ய தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம்; அதற்கு மேலும் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் ஆகலாம் என்று தெரிவித்தனர் 

இதனிடையே மருத்துவர்களின் ஆலோசனை பெற்று அவரது மகன் எஸ்பிபி சரண் தனது தந்தை உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது தகவல்களை பகிர்ந்து வருகிறார் நேற்று அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட தகவலில் ‘எனது தந்தையின் உடல் நிலை கடந்த, 48 மணி நேரமாக மிகவும் சீராக இருப்பது நம்பிக்கை தருகிறது. அனைவரின் பிரார்த்தனைக்கும் அன்புக்கும் நன்றி’ என, குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை திரைத்துறை செய்தி தொடர்பாளர் தகவலுடன் எஸ்பிபி சரண் பெயரிட்டு ஒரு தகவல் உலா வந்தது அதில் எஸ்பிபி க்கு கொரானா நெகட்டிவ் என வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிறிது நேரத்தில் எஸ்பிபி சரண் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார் அந்த வீடியோவில், எனது தந்தைக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என்று உள்ளதாக வதந்தி பரவுகிறது. அது நெகட்டிவ் அல்லது பாசிட்டிவ் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது” என  தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி. சரண் வெளியிட்ட அந்தப் புதிய வீடியோவில், அனைவருக்கும் வணக்கம். வழக்கமாக மருத்துவமனை மருத்துவர்கள் உடனான  ஆலோசனைக்கு பிறகே, எனது தந்தையின் உடல்நிலை குறித்து தகவலை வெளியிடுவேன். ஆனால், எதிர்பாராதவிதமாக, இன்று காலையிலேயே வெளியிட வேண்டிய சூழ்நிலை வந்துள்ளது. எனது தந்தையின் உடல்நிலை குறித்த தகவல் முதலில் எனக்கு மட்டும் தான் வரும். அதன் பிறகே நான் மீடியாவிற்கு தகவல் தெரிவிப்பேன். ஆனால், எனது தந்தைக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதாக சில மீடியாக்களில் வதந்தி பரவி வருகிறது. 

கொரோனா பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் என்பதை தாண்டி, எனது தந்தையின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. எக்மோ, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. இது அவரது நுரையீரலை குணப்படுத்தும் என நம்புகிறோம். எனவே வதந்தி பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். மருத்துவர்களுடன் இன்று மாலை  ஆலோசனை நடத்திவிட்டு, எனது தந்தையின் உடல்நிலை குறித்து அடுத்த தகவலை தெரிவிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்

24/8/20 #SPB health update

Posted by Charan Sripathi Panditharadhyula on  Sunday, August 23, 2020

Source: Vellithirai News

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,100FansLike
380FollowersFollow
74FollowersFollow
74FollowersFollow
3,944FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

வலிமை, பீஸ்ட் படங்களுக்குப் பிறகு வசூலில் கலக்கும் பொன்னியின் செல்வன் ..

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்30இல்  வெளியான இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்...

படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!

புத்தம் புது படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!...

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் பிரபல பாடகி ஜோனிடா காந்தி..

பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி , பஞ்சாபி தெலுங்கு மராத்தி குஜராத்தி கன்னட...

இந்தவாரம் என்ன என்ன சினிமா திரையில் ஓடிடியில் பார்க்கலாம்…

வரும் செப்டம்பர் 30இல் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், இதற்கு ஒருநாள் முன்னதாக தனுஷ் நடித்த...

Latest News : Read Now...