enga veetu mappillai - 2026 கடந்த சில மாதங்களாக நடிகர் ஆர்யா நடத்தி வந்த எங்க வீட்டு மாப்பிள்ளை தொலைக்காட்சி ஷோவின் இறுதி போட்டி நேற்று ஒளிபரப்பானது. இதில் ஆர்யா இறுதி போட்டிக்கு தேர்வான சுசானா, சீதாலக்ஷ்மி, அகதா ஆகிய மூவரில் ஒருவரை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆர்யா எதிர்பார்த்தது போலவே இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே என்னை விரும்பினர். எனவே இவர்களில் ஒருவரை தேர்வு மற்றவர்களை ஹர்ட் செய்ய விரும்பவில்லை என்று கூறினார்.

enga veetu mappillai1 - 2026அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: என்னோட வாழ்க்கையை முடிவு செய்றதா அறிவிக்கப்பட்ட இந்த ஷோவுல, இவ்ளோ எபிசோடுகள் டெலிகாஸ்ட் ஆனதுல இருந்து என்னால டிசைட் பண்ண முடியலை. எனக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுது. அதுபோக, இந்த ஷோவுக்கு வந்த எல்லாருமே என்னைப் பிடிச்சு வந்தாங்க. என்னோட மனம் விட்டுப் பேசினாங்க. நானும் அவங்ககிட்ட உண்மையாகவே நடந்துக்கிட்டேன். ஸோ, அவங்க யாரையுமே நான் ஹர்ட் பண்ண விரும்பலை. அதனால, என்னோட மேரேஜ் பத்திக் கொஞ்சம் யோசிச்சு, கூடிய சீக்கிரமே சொல்லிடுறேன்!”

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இவ்வாறு ஆர்யா கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending