போலியை தவிர்க்க உண்மையான டுவிட்டர் பக்கத்தை ஓப்பன் செய்த விஜய்சேதுபதி

Published:

vijay sethupathi2 - 2026 சமீபத்தில் ரஜினிகாந்த் கூறிய போராட்டம் மற்றும் சமூக விரோதிகள் குறித்த கருத்துக்கு விஜய்சேதுபதி கூறிய கருத்துக்களாக டுவிட்டரில் வெளிவந்தது என்பது தெரிந்ததே ஆனால் அவை அனைத்தும் விஜய்சேதுபதியின் போலி டுவிட்டர் பக்கங்கள் என்றும் தனக்கு டுவிட்டரில் அக்கவுண்டே இல்லை என்றும் விஜய்சேதுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்தார்’

vijay seethupathi - 2026இந்த நிலையில் போலிகளை தனது ரசிகர்கள் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் விஜய்சேதுபதி தற்போது உண்மையிலேயே டுவிட்டரில் இணைந்துள்ளார். மேலும் அதில் முதல் டுவீட்டாக ‘நான் கூறியதாக நிறைய தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. அந்த கருத்துக்கள் என்னுடைய பெயரில் இயங்கும் போலிகளின் செயல் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்

விஜய்சேதுபதியின் இந்த உண்மையான டுவிட்டர் பக்கத்தை அவரது ரசிகர்கள் ஃபாலோ செய்ய தொடங்கிவிட்டனர். இதனால் இந்த பக்கத்தின் ஃபாலோயரக்ள் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து கொண்டே வருகிறது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img