ஜெயம்ரவி ரசிகர்களுக்கு நாளை ஆக்சன் விருந்து

சினி நியூஸ் சினிமா

தமிழ் சினிமாவில் ஒரே நாளில் இரண்டு மூன்று படங்கள் வெளியாவது என்பது பெரிய விஷயமே அல்ல. ஆனால் இப்போது ஒரே நாளில் பல படங்கள் வெளியாகின்றன. வாரம் 4 படம் , 5 படங்கள் வெளியாகிறது. இதனால் மக்கள் எந்த படத்தை எப்போது பார்ப்பது என்று தெரியாமல் குழப்பம் அடைகின்றனர். எனினும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படங்களுக்கு உடனே சென்று பார்க்கின்றனர். அத்தகைய எதிர்பார்ப்பை உருவாக்க இன்றைக்கு கோலிவுட்டின் அத்தனை தயாரிப்பாளர்களுமே களம் இறங்கிவிட்டனர்.

ஒரே நாளில் பல படங்கள் வெளியானாலும், தம்முடைய படம் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் முனைப்பில் ஒவ்வொரு தயாரிப்பாளர்களுமே செயல்படுகின்றனர். அந்த வகையில். டிசம்பர் 21ம் தேதியை குறிவைத்து சுமார் 7 படஙகள் களத்தில் நிற்கின்றன. சீதாக்காதி, மாரி 2, கனா, கேப்ஜே, சிலுக்குவார்பட்டி சிங்கம் என பட்டியல் நீள்கிறது.

இந்த பட்டியலில் உள்ள ஒரு முக்கியமான படம் தான் அடங்கமறு. போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்துள்ள இந்தபடத்தின் ஆக்சன் காட்சிகளை எப்படி உருவாக்கினார்கள் என்பது குறித்த மேக்கிங் வீடியோவை நாளை மாலை 4.30மணிக்கு வெளியிடப் போகிறார்கள்.

இந்த வீடியோ மக்களை கவரும் பட்சத்தில் அடுத்தடுத்த நாட்களில் இன்னும் சில அப்டேட்களை காணலாம். அடங்க மறு படம் மட்டுமில்லை, சிலுக்குவார் பட்டி சிங்கம், மாரி2, கனா, என எல்லா படங்களுமே இந்த ரூட்டில் இறங்கியுள்ளார்கள் என்பது உண்மை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.