அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினி.. டிச.31ம் தேதி கட்சி பெயர் அறிவிப்பு…

Published:

rajini

பல வருடங்களாகவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிற குழப்பம் நீடித்து வந்தார். மேலும், தன்னுடைய உடல்நிலை உள்ளிட்ட பல காரணங்களை காட்டி அவரும் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு தனது மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசிய பின்பும் அவர் அரசியல் அறிவிப்பை அறிவிக்கவில்லை. விரைவில் அறிவிப்பேன் என்று மட்டுமே கூறினார்.

இந்நிலையில், தற்போது திடீரென நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.
#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ’ என டிவிட் செய்துள்ளார்.

மேலும், ‘வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான நாணயமான வெளிப்படையான ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம்..நிகழும்’ என குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

ரஜினி அறிவித்துள்ள படி வருகிற 31ம் தேதி அவர் தனது கட்சியை அறிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img