ரூ.1000 கோடி பட்ஜெட்… எந்த ஹீரோவும் செய்யாத சாதனை… பட்டைய கிளப்பும் பிரபாஸ்…

சினி நியூஸ்

salaar

தெலுங்கில் ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய சினிமா உலகில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ்.

பிரபாஸ் தற்போது சாஹோ படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். இது பிரபாஸின் 20வது திரைப்படமாகும்.

அடுத்து, 21வது படமாக தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடித்து அவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்த ‘மகாநடி’பட இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் ஒருபுதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார்.

prbas

அதன்பின் கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த 4 திரைப்படங்களின் பட்ஜெட் மொத்தம் ரூ.1000 கோடியை தாண்டுவதாக கூறப்படுகிறது. இந்திய திரையுலகில் ஒரே சமயத்தில் ரூ.1000 கோடி முதலீடு செய்யப்பட்ட நடிகர் பிரபாஸை தவிர வேறு யாருமில்லை எனக் கூறப்படுகிறது.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.