டிவிட்டரில் தெறிக்கவிட்ட விஜய்.. முதலிடத்தை பிடித்த செல்பி புகைப்படம்…..

Published:

vijay

இந்த வருட துவக்கத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்த போது நடிகர் விஜயை கான அவரின் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். எனவே, அங்கு சென்ற விஜய் ஒரு வேனின் மீது ஏறி அவர்கள் பின்னால் தெரிய ஒரு செல்பி புகைப்படம் எடுத்தார். அதன்பின் அப்புகைப்படத்தை டிவிட்டரிலும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், 2020ம் வருடம் டிவிட்டரில் அதிகம் ரீடிவிட் செய்யப்பட்ட டிவிட்டாக விஜயின் செல்பி புகைப்படம் அமைந்துள்ளது. இந்த தகவலை டிவிட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனீஷ் மகேஸ்வரி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளர்.

இதையடுத்து, #VIJAYRuledTwitter2020 என்கிற ஹேஷ்டேக்கில் விஜய் ரசிகர்கள் இதை மகிழ்ச்சியுடன் டிவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், 2020ம் ஆண்டில் அதிக ட்வீட்கள் பதிவிடப்பட்ட திரைப்பட ஹேஷ்டேக்-களில் #SooraraiPottru ஹேஷ்டேக் 2ம் இடத்தைப் பிடித்துள்ளது!

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img