மதுரையில்… சிதைந்து போன நிழற்குடை தளங்கள்!

புகார் பெட்டி மதுரை
madurai road side shadow
madurai road side shadow


மதுரை: மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் பயணிகள் வந்து பஸ்ஸுக்காக காத்திருக்க அமைக்கப்பட்ட நிழற்குடையின் தளங்கள் சிதைந்து போயுள்ளன.

பயணிகள் நலனுக்காக பெரிய நகரங்களில் மாநகராட்சிகளும், சிறிய நகரகங்களில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்றங்கள், இதுபோல பஸ் நிறுத்தங்களில் பல லட்சம் மதிப்பீட்டில் அமைத்து வருகிறது. 

இவ்வாறு அமைக்கப்படும் நிழற்குடைகளுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்களுடைய  தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதியை சம்மந்தப்பட்ட துறைகளுக்கு ஒதுக்கீடு செய்கின்றனர். அவ்வாறு பல இடங்களில் அமைக்கப்படும் பஸ் நிறுத்த நிழற்குடைகளில் போடப்படுகின்ற இருக்கைகள், கீழே அமைக்கப்படும் தளங்கள் தரமற்று காணப்படுவதால், அமைக்கப்பட்ட சில மாதங்களிலையே தரைப் பகுதியில் போடப்பட்ட கற்கள் பெயர்ந்து விடுகின்றன.

madurai road side shadow
madurai road side shadow

பல இடங்களில் பஸ் நிறுத்தம் தொடர்பாக வைக்கப்பட்டுள்ள பலகைகளும் பலமான காற்றில் அடித்து செல்லப்படுகின்றன.பல பெரிய நகரகங்களில் குளிரூட்டப்பட்ட நிழற்குடைகளூம் அமைக்கப்பட்டு வருவதை சமூக ஆர்வலர்கள் வரவேற்பதுடன், பயணிகள் நிழற்குடைகளை சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகம் தொடர்ந்து பராமரித்து வந்தால், மக்கள் வரிப்பணம் வேறு ஏதாவது வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படும் என்பது நகர மக்களின் நம்பிக்கையாகும்.

  • செய்திக்கட்டுரை: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.