விபத்தில் இறந்த காதல் கணவன்! மருத்துவமனை வந்த மனைவி கழிவறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
susaid
susaid

விழுப்புரத்தில் காதல் கணவர் விபத்தில் இறந்தது தெரிந்ததும் மனைவியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரும் சரளா என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் சில மாதங்கள் முன்னதாக இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நண்பர்களோடு ரமேஷ் பைக்கில் சென்றபோது பைக் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபத்தில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து ஜிப்மர் வந்த சரளா கதறி அழுதுள்ளார்.

அவரது உறவினர்கள் அவரை ஆறுதல் படுத்த முயன்ற நிலையில் கழிவறைக்குள் சென்ற அவர் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காதல் கணவன் இறந்ததால் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.