பொதுவாக மரங்கள்தான் மக்களின் உயிரை வாழவைக்கும் என்பார்கள். ஆனால், இங்கே ஒரு மரம் எத்தனை உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது.
திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன் பாளையம் வட்டத்தில் உள்ள கேத்தனுர் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு பெட்ரோல் போடுவதற்காக நடு சாலையில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று, நின்று நிதானித்து, ஆனால் திடீரென்று வலது புறம் திரும்புகிறது. அதே நேரம் பின்புறம் படுவேகமாக பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் ஒன்று, திடீரென கார் வலப்புறம் திரும்பியதால், நொடிப் பொழுதில் தாமும் வலது புறம் திரும்பி காரில் மோதாமல் இருக்க முயன்ற போது, சடாரெனத் திரும்பியதால் பஸ் கவிழத் தொடங்கியது.
ஆனால் நடுவே கம்பீரமாக நின்று கொண்டிருந்த மரம், அந்த பஸ்ஸை கவிழாமல் காப்பாற்றி, பஸ்ஸுக்கு அடியில் கார் நசுங்காமலும் காப்பாற்றி, பலரது உயிரைக் காத்துள்ளது.
நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சி…