சிலைக் கடத்தல் விவகாரத்தில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்று, சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் பொன்.மாணிக்கவேல் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, பொன்.மாணிக்கவேல் தனது விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்யுமாறு, சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
உரிய ஆதாரங்களுடன் பதில்மனு தாக்கல் செய்ய சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டு வழக்கை ஆக.6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்.