தீயணைப்பு மீட்புப் பணிகள் குழுவினர் தெளித்த கொரோனா கிருமி நாசினி!

Published:

sengottai fire dept
sengottai fire dept

செங்கோட்டையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குழு சார்பில் கொரனோ தடுப்பு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது.

செங்கோட்டை, மே,31: செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குழு சார்பில் கொரோனா தடுப்பு கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடந்தது.

தமிழ்நாடு தீயணைப்பு-மீட்பு பணிகள் துறை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் திருநெல்வேலி மாவட்ட அலுவலர் மகாலிங்கமூர்த்தி உத்தரவின்படி கோவிட்-19 வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கோட்டை தீயணைப்பு-மீட்பு பணிகள் நிலைய   அலுவலர் சிவசங்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சண்முகவேல்;, மாரிமுத்து, சிவக்குமார், செந்தில்குமார், வினுக்குமார், கோமதிசங்கர் ஆகியோர் தீயணைப்பு-மீட்பு  வாகனம் மூலம் காலங்கரை,  விசுவநாதபுரம், ரயில் நிலையம், பெரியபிள்ளைவலசை விலக்கு,  வனத்துறை அலுவலகம் ஆதிதிராவிட மாணவர்கள் தங்கும் விடுதி மின்வாரிய அலுவலகம், முப்புடாதி அம்மன் கோவில் திடல், ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Related articles

Recent articles

spot_img