வேப்ப எண்ணெய் தெளித்தால் வெட்டுக்கிளியை அழிக்கலாம்!

சென்னை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
vettukkili
vettukkili

விவசாயிகள் கவனிக்க… வேப்ப எண்ணெய் தெளித்தால் வெட்டுக்கிளியை அழிக்கலாம்!

சென்னை: பயிர்களில் வேப்ப எண்ணெய் தெளிப்பதன் மூலம் வெட்டுக்கிளி தாக்குதலை ஓரளவு தடுக்க முடியும் என என வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து நம்நாட்டிற்கு பயங்கரவாதத் தாக்குதல் மட்டுமல்ல-வெட்டுக்கிளி பாதிப்பும் கூட இருந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.
பாகிஸ்தானில் இருந்து பெரும் கூட்டமாக கடந்த மாதம் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த வெட்டுக்கிளிகள், தற்போது மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரம், உத்தரப் பிரதேசம் ஆகிய பல மாநிலங்களுக்கு பரவி ஏராளமான பயிர்களை பதம் பார்த்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் அச்சமும், கவலையும் அடைந்துள்ளனர்.

vettukkili
vettukkili

இந்த வெட்டுக்கிளி தாக்குதல்களில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க விரும்பும் விவசாயிகள், பயிர்கள் மீது வேப்ப எண்ணெய் தெளிப்பதன் மூலம் ஓரளவு பாதுகாக்கலாம். குறிப்பாக ஒரு ஹேக்டேருக்கு 2.5 லிட்டர் வேப்ப எண்ணெய்யை தெளிக்க வேண்டும்.

மேலும் இந்த வெட்டுக்கிளில் இரவில் ஓய்வெடுக்கும் நேரத்தில் பெரும் புகையை மூட்டமாக பரவ விட்டு அவற்றை அழிக்கலாம். ஆனால் பயிர்கள் தீயினால் கருகி விடும் என்பதால் விவசாயிகள் இதை மிக கவனமுடன் கையாள வேண்டும் என்றும் மகாரா்ட்டிர மாநிலத்தில் உள்ள வசந்த்ரவ் நாயக் வேளாண் பல்கலைக் கழகம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

  • செய்தி: சதானந்தன், சென்னை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.