வாகன நுழைவு கட்டணமா … இல்லை பார்க்கிங் கட்டணமா?

புகார் பெட்டி
rail tambaram
rail tambaram

வாகன நுழைவு கட்டணமா இல்லை பார்க்கிங் கட்டணமா? ரயில்வே அதிகாரிகள் விளக்குவார்களா?

நேற்று உறவினர் ஒருவரை ரயில் ஏற்றி விட தாம்பரம் ரயில் நிலையத்திற்கு காரில் செல்ல நேர்ந்தது. முன்பெல்லாம் இங்கே பார்கிங் சார்ஜ் என்று எதுவும் இல்லாமல் இருந்தது . இப்பொது வசுலிக்கிறார்களாம். இருக்கட்டும். ஆனால் பார்க்கிங் கட்டணம் என்றால் என்ன? காரை கொண்டுபோய் அங்கே ஓரிடத்தில் பார்க் பண்ணி நிறுத்தி விட்டு காத்திருந்தால் அதற்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கலாம். ஆனால் நேற்று ஒருவரை ரயில் நிலையத்திற்குள் இறக்கி விட்டு உடனே திரும்பி வருவதற்கு உள்ளே நுழைந்த உடனே ஒருவர் வந்து 75 கொடுங்கள் என்றாரே பார்க்கலாம்.

நான் கேட்டேன் ” எதுக்கு 75?”

“பார்க்கிங் சார்ஜ். ” என்கிறார் ஒரு வசூலிப்பாளர்.

” நான் வண்டிய ஸ்டேஷன் ல பார்க் பண்ணவே போறதில்லை. ரயிலுக்கு போராவங்களை உள்ளே வந்து இறக்கி விட்டு இப்போவே.கிளம்ப போறேன். இதோ இன்ஜின் கூட ஆப் பண்ணலை உனக்கு எதுக்கு பார்க்கிங் சார்ஜ் குடுக்கணும்னு ” ? கேட்டேன்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

“உள்ளே வந்தாலே பார்க்கிங் சார்ஜ் கட்டனும் ” என்றார்.

“இதென்னங்க அநியாயமா இருக்கு? பார்க்கிங் சார்ஜ் னா என்ன னு தெரியுமா? வண்டிய பார்க் பண்ணி நின்னாதான் நீ பார்க்கிங் சார்ஜ் கேக்கணும். உன் எடத்துல பார்க் பண்ண போறதில்லை வெறுமென இறக்கி விட்டு இப்போவே போக போறேன் றேன், காசு குடு னு மிரட்டி கிட்டு இருக்க.. நீ கேக்கறதுக்கு பேரு நுழைவு கட்டணம். வண்டிங்க உள்ளே வந்தாலே காசு காட்டனும் னா அதுக்கு பேரு நுழைவு கட்டணம் பார்க்கிங் கட்டணம் கிடையாது. நீ பார்க்கிங் கட்டணம் னு போர்டு போட்டுவிட்டு அடாவடியா நுழைவுக்கே கட்டணம் கேக்குற.. அப்படின்னா தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் வெளியிலே நுழைவு கட்டணம் உண்டு னு போர்டு போடுங்க…

வண்டிகளை உள்ளே விடாமல் அங்கேயே விபரத்தை சொல்லுங்க..
அதை விட்டுவிட்டு உள்ளே வந்த உடனே வந்தாலே காசு னா என்ன அர்த்தம்? பார்க்கிங் கட்டணம் னு போர்டு போட்டுட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு உள்ளே நுழையவே கட்டணம் கேபிங்களா என்று உரத்த குரலில் சத்தம் போட துவங்கினேன்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அந்த நபரோ “உள்ளே வந்தாலே காசு சார்.. இப்போ கெளம்புங்க” என வசூலிக்காமல் வண்டியை வேகமாக எடுக்க சொல்லி கிட்டத்தட்ட விரட்டி விட்டார்.

எனக்கு புரியவில்லை…

கார் பார்க்கிங் ஒரு மணி நேரத்திற்கு 75 ரூபாய் என்பது என்ன அநியாயம்? ஏன்? அதுவும் சிறப்பு கட்டணம் என்று.போர்டு.போட்டிருக்கிறார்கள்? எதற்காக சிறப்பு கட்டணம்?

தாம்பரம் ரயில் நிலைய வாயில் உள்ளே நுழைந்தாலே காருக்கு கட்டணம் என்றால் அது பார்க்கிங் கட்டனமா நுழைவு கட்டனமா?

தாம்பரம் ரயில் நிலையத்திற்குள் நுழைவதற்கே கட்டணம் கொடுக்க வேண்டும் என கட்டாய படுத்தினால் இனி ஓலா உபேர் மாற்றும் தனியார் என எல்லா கார்களையும் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெளியேவே ஜி எஸ் டி சாலையிலேயே நிறுத்தி ஆட்களை.இறக்கி விட்டு செல்லலாமா? அதை போக்குவரத்து துறை அதிகாரிகள் அனுமதிக்கிறார்களா?

லக்கேஜ் அதிகம் கொண்டு போவது ரயிலில் தான் சாத்தியம் என்பதாலேயே மக்கள் ரயில் பயணத்தை தேர்ந்தெடுகின்றனர்.
லக்கேஜுடன் வருபவர்களை ரயில் நிலையதிற்கு உள்ளே வரை கொண்டு விட்டு இறக்கி விடாமல் 5 நிமிடம் உள்ளே நுழைய 75 ரூபாய் கொடுக்க வேண்டுமே என ரோட்டிலேயே இறக்கிவிட முடியுமா?

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

தாம்பரம் ரயில் நிலையத்தில் கார்களுக்கு வசூலிக்க படுவது பார்க்கிங் கட்டனமா இல்லை நுழைவு கட்டணமா?

ரயில்வே அதிகாரிகள் பார்க்கிங் கட்டணத்தை நுழைவு கட்டணமாக வசூலிப்பதை தடுப்பார்களா?

யாரிடம் போய் முறையிடுவது..?

ஏன் இந்த அராஜகம் ? சாதாரண மக்களிடம் அடித்து பிடுங்கும் அவலம் என்று மாறும்?

  • ராம்குமார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.