பட்டாசு தடைக்கு யார் காரணம்? பரபரப்பை ஏற்படுத்திய நோட்டீஸ்!

உரத்த சிந்தனை புகார் பெட்டி மதுரை
crackers - 2026

பட்டாசு தடைக்கு யார் காரணம் என்ற தலைப்பில் விருதுநகர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங் தள் அமைப்பினர் வெளியிட்ட நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் தங்களைத் தாங்களே குற்றம் சுமத்திக் கொள்வது போல் உள்ளது.

கிறிஸ்தவ பள்ளிகளில் நமது குழந்தைகளிடம் பட்டாசு வெடிக்கக் கூடாது என கிறிஸ்தவ பள்ளிகள் சத்தியம் வாங்கிய போது அமைதியாக இருந்தது யார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்

மேலும் அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகள்… கிறிஸ்தவர்களும் கம்யூனிஸ்டுகளும் பட்டாசு தயாரிக்க குழந்தைகளை எல்லாம் பயன்படுத்துகின்றனர் ஆதலால் நாம் பட்டாசு வெடிக்கக் கூடாது என ஊர் ஊராக பிரச்சாரம் செய்தனர் அப்போது அமைதியாக இருந்தது யார்?

பட்டாசு வெடிப்பது நமது மதத்திற்கு எதிரானது எனவே நாம் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று வேற்று மத வழிபாட்டுத் தலங்களில் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட போது அமைதியாக இருந்தது யார்?

டெல்லி உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்த நம் தொழிலை நோக்கி நம் வருமானத்தை சீரழித்து நாசம் செய்தது யார்?

பட்டாசு தொழிலை நோக்கி நம் பாரம்பரியத்தை நாசமாக்க உயர் உச்ச நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து தன்னார்வ தொண்டு நிறுவனம் என்றும் சில கட்சிகளும் ஆதரவு தெரிவித்த போது அதை கண்டிக்காமல் அமைதியாக இருந்தது யார்?

பட்டாசு தொழிலில் மட்டுமல்ல சபரிமலை கள்ளக்காதல் தீர்ப்பு ஓரினச்சேர்க்கை தீர்ப்பு என நமது பண்பாடு பாரம்பரியம் கலாசாரத்தை மிகப் பெரிய சதி நடக்கிறது அந்த சக்திகள் யார் என அடையாளம் கண்டு கொள்ளாத நாமே காரணம்… – என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது!

அண்மைக்காலமாக பட்டாசு தடை அறிவிப்பு வெளி வந்த பின்னர் சிவகாசி விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் மதமாற்றங்கள் நடைபெறுவதாகவும், வேலைவாய்ப்பின்றி இருக்கும் மக்களிடம் அவர்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்பதாகக் கூறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன! இவை சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இப்படி ஒரு நோட்டீசை ஹிந்து பரிஷத் அமைப்பு வெளியிட்டுள்ளது!

crackers ban who is responsible - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.