அப்ரூவ்ட் ஸ்தபதிகள் பெயரில் கொத்தனார்களின் பட்டியலை வைத்து… கொள்ளையடிக்கும் அறநிலையம்!

Published:

vaideeswaran temple tree fallen - 2026

அப்ரூவ்ட் ஸ்தபதிகள் எனும் பெயரில் கொத்தனார்களின் பட்டியலை வைத்துக் கொண்டு, கமிஷன் பேசி, கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்கிறார்கள் திமுக.,வினர் என்று புகார்களைக் கூறி வருகின்றனர் சமூகத் தளங்களில்!

கோயில்கள் கொள்ளையரின் கூடாரம் என்று கதை வசனம் பேசி கைத்தட்டல் வாங்கிய கையோடு, கோயில்களுக்குள் புகுந்து கபளீகரம் செய்துவிட்டது கருணாநிதியின் கொள்ளைக் கூட்டம் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறார்கள் சமூக வலைத்தளங்களில்! அதோ திருடன் அதோ திருடன் என்று திசை திருப்பிவிட்டு, ஒட்டுமொத்தமாக கொள்ளை அடித்துக் கொண்டு செல்லும் கொள்ளைக்காரக் கூட்டமாக, திமுக.,வினர் இருப்பது அண்மைக்கால சிலைத்திருட்டு வழக்குகளும் சம்பவங்களும் எடுத்துக் காட்டுகின்றன என்கிறார்கள்! இதனை நீதிமன்றமே பகிரங்கமாகக் கூறி, நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இன்னுமோர் அதிர்ச்சி தரும் தகவலையும் வெளியிட்டு, இதில் விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்து வருகிறார்கள்!

அதில், அப்ரூவ்ட் ஸ்தபதிகள் என்ற பெயர்ப் பட்டியலை வைத்துக் கொண்டு, ஆகம விதிகள் எதுவும் தெரியாத வெறும் கொத்தனார்களை ஈடுபடுத்துகிறார்கள். இதில் கமிஷன்கள் மூலம் கொள்ளை அடிக்கப்படுகிறது. இதில் அறநிலையத்துறை அதிகாரிகள் பெருமளவில் கூட்டு சேர்ந்து ஈடுபடுகிறார்கள். இந்த விவரம் தெரியவருவதால், கோயில்களுக்கு கட்டுமானத்தில் ஸ்பான்ஸர்கள் வரவே தயங்குகிறார்கள் என்று புகார் கூறுகின்றனர். இது குறித்து உண்மையான விசாரணை மேற்கொள்ளப் பட்டால் பல பகீர் தகவல்கள் தெரியவரும் என்கின்றனர்.

ALSO READ:  அன்புத் தம்பி அண்ணா மலைக்கு...
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img