முன்விரோதம்,இரு இளைஞர்கள் படுகொலை, 5 பேர் மீது வழக்கு பதிவு, 3 பேர் மதுரை கோர்ட்டில் சரண்..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

அருப்புக்கோட்டை அருகே முன்விரோதம் காரணமாக,இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.இதில் 3 பேர் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

IMG 20221125 WA0119 1 - 2026
கொலையான ரத்தினவேல் பாண்டியன்.
IMG 20221125 WA0118 - 2026
கொலையான சபரிமலை.

.

IMG 20221125 WA0121 - 2026
அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் காந்திநகர் அருகே இரட்டைக்கொலை நடந்த இடத்தில் நேரில் விசாரணை நடத்தி ஆய்வு மேற்கொண்டார் மதுரை சரக டி.ஐ.ஜி.பொன்னி
                     விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை இரவில் முன்விரோதம் காரணமாக இரு இளைஞர்கள் கொடூரமான முறையில் ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டனர்.இதுதொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.டி.ஐ.ஜி பொன்னி நேரில் விசாரணை.

                 திருச்சுழி வட்டம் உடையனாம்பட்டி ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராக்கம்மாள்(52).இவர் கடந்த மார்ச் மாதம் 12 ம் தேத் குடும்பப்பிரச்சினை காரணமாக உறவினர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.இதுதொடர்பாக திருச்சுழி போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்த நிலையில், விசாரணை நடைபெற்று வந்தது.இக்கொலைவழக்கில் தொடர்புடைய உடையனாம்பட்டியைச் சேர்ந்த சபரிமலை(36) என்பவர் பிணையில் வெளிவந்து தனது உறவினரான திருச்சுழி வட்டம் குலசேகர நல்லூரைச்சேர்ந்த  ரத்தினவேல் பாண்டியன் (32)  என்பவரது வீட்டில் தங்கியிருந்தார்.இந்நிலையில் அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் காந்தி நகர் அருகே உள்ள புதர்க்காட்டில் சபரி மலை மற்றும் ரத்தினவேல் பாண்டியன் ஆகிய இருவரும் வியாழக்கிழமை இரவு கழுத்து அறுக்கப்பட்டும், ஆயுதங்களால் தாக்கப்பட்டும் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்குச்சென்று நள்ளிரவில் இருவரது சடலங்களையும்  அருப்புக்கோட்டை போலீசார் கைப்பற்றினர்.மேலும் கொலை நடந்த இடத்தில்,  மாவட்ட எஸ்.பி. மனோகர் தலைமையில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.மேலும்,மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதுகுறித்து மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு,விசாரணையை முடுக்கிவிட்டார்.இதுதொடர்பாக வழக்கு பதிந்த அருப்புக்கோட்டை நகர் குற்றப்பிரிவு போலீசார், உடையனாம்பட்டியைச்சேர்ந்த கருப்பையா மகன் சந்தன மகாலிங்கம், சுந்தர்ராஜ் மகன் கருப்பையா, மற்றும் சிவகாசியைச்சேர்ந்த குருசாமி மகன் கருப்பையா, சுந்தர்ராஜ் மகன் பெரியசாமி, சுந்தர்ராஜ் மகன் குருசாமி ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.இதனிடையே இந்த இரட்டைக் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் உடையனாம்பட்டி ராக்கம்மாளின் ( மார்ச் 12ல் கொலையானவர் ) மகன்களான சூரிய பிரகாஷ்(21), ஜெயப்பிரகாஷ்( 23) மேலும், மற்றொருவரான  முகேஷ் குமார்(37) ஆகிய  3 பேர் மதுரை 6 வது குற்றவியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நண்பகலில் ஆஜராகினர்.அருப்புக்கோட்டை நகர் குற்றப்பிரிவு போலீசார் இக்கொலைக்குற்றத்தில் தொடர்புடையவர்களாகக் கருதி வழக்கு பதிந்து 5 பேரைத் தேடிவரும்  நிலையில் , மதுரை கோர்ட்டில் சரணடைந்தவர்கள்  3 பேர் குறித்தும் விசாரணை வளையத்தில் சேர்த்து,தீவிர  விசாரணை மேற்கொண்டனர்.
ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Related articles

Recent articles

spot_img