தாய், தந்தையை கொலை செய்து சடலத்துடன் 2 நாட்களாக வீட்டிலேயே இருந்த மகன்..

Published:

images 45 2 - 2026
Tamil News large 3181656 - 2026

கும்பகோணம் அருகே பயங்கரம்- தாய், தந்தை அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை செய்து சடலத்துடன் 2 நாட்களாக வீட்டிலேயே இருந்த மகனை போலீசார் கைதுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம், தில்லையம்பூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (82). இவரது மனைவி பாப்பா (எ) லட்சுமி (73). இவர்களுக்கு ராஜேந்திரன் மற்றும் ரவிச்சந்திரன் என்ற இரண்டு மகன்களும், கீதா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

மூத்த மகன் ராஜேந்திரன் (52) இளம் வயதிலேயே மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் திருமணம் செய்யாமல் இருந்துள்ளார். 2வது மகன் ரவிச்சந்திரன், மின்சாரத்துறையில் வேலை பார்த்து வந்தார். திருமணமாகி மனைவி மேனகா மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் விபத்தில் உயிரிழந்தார். மகள் கீதாவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவரும் இறந்துவிட்டார்.

மனநிலை பாதிக்கப்பட்டுள்ள ராஜேந்திரனுக்கும், பெற்றோருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

இந்நிலையில், கடந்த 26ம் தேதி முதல் கோவிந்தராஜ், அவரது மனைவி லட்சுமி ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. தகவலறிந்த பட்டீஸ்வரம் போலீசார், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பெற்றோர் இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உடல் அழுகிய நிலையில் இருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, ராஜேந்திரன் தனது தாய் மற்றும் தந்தையை அரிவாளால் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டி கொலை செய்ததும், இருவரது சடலத்துடன் இரண்டு நாட்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து சாப்பிட்டு வழக்கமான செயல்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.  இதையடுத்து போலீசார், வழக்கு பதிந்து ராஜேந்திரனை கைது செய்தனர்.

முதல் கட்ட விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் அரிவாளால்  தாய், தந்தையை வெட்டிக் கொன்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தில்லையம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்ததாக கருதப்படும் ராஜேந்திரனை காவல்துறையினர் விசாரணைக்காக கும்பகோணம் அழைத்துச் சென்றுள்ளனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img