08 July27 exam time table

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதில் கடைசி பாடம் நடைபெறும் அன்று மட்டும் சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. அந்த மாணவர்களுக்கு மீண்டும் மறுதேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், நடந்து முடிந்த வேதியல் தமிழ் வழி தேர்வில் குறிப்பிட்ட கேள்விக்கு பதிலளித்த மாணவர்களுக்கு கூடுதலாக 3 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

புரதம் என்ற சொல்லுக்கு பதில் ஆங்கிலத்தில் புரோட்டீன் என கேள்வியில் தவறாக இடம்பெற்றதால் இந்த கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன. அதேபோல அந்த கேள்விக்கு பதிலளிக்காத மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending