பள்ளிகள் திறப்பு: முதல்வரின் கருத்து!

கல்வி சற்றுமுன் தமிழகம்
school

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளாக் கடந்த மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தேர்வுகள் நடைபெறாததால் பல மாநிலங்கள் பள்ளி மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கியுள்ளன.

இதனைத் தொடர்ந்து பள்ளிகள் எப்போது திறக்கபடும் என்பது தெரியாத நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் எப்போது பள்ளிகள் தொடங்கும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்துவதில் பிரச்சனைகள் அதிகம் இருப்பதாகவும் செப்டம்பர் மாதம் முதல் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிகள் சங்கம் வலியுறுத்தி இருக்கிறது.

மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடுவதால் முதற்கட்டமாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் மத்தியில், கொரோனா பதற்றம் பயம் இருக்கத்தான் செய்யும் என்று மனநல ஆலோசகர்கள் தெரிவித்துள்ளார்கள். பள்ளிகளில் சமூக இடைவெளி என்பது மாணவர்களில் மனநிலையை பாதிக்கும் என்பது அவர்களின் கருத்து

tn-cm

இது குறித்து தமிழக முதல்வர் கூறியுள்ளதாவது : இந்தியா முழுவதிலும் உள்ள நிலைமையை கவனித்து நிலைமை சீராகும் போது, பள்ளிகளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.