கனமழை காரணமாக… இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கல்வி சற்றுமுன் தமிழகம்
weather nov 29 - 2026

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு வெளியிட்டன.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், திருவாரூர், கடலூர், தேனி, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திண்டுக்கல், சேலம், நாகபட்டிணம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

அரியலூர், ராணிப்பேட்டை, சேலம், வேலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 1-8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

புதுவை மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று, அந்த அந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டனர்.

  • தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (நவ.29) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு
  • கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை 29.11.21 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை 29/11/21 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
  • திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை (நவ.29) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
  • கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
  • கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 29/11/21 விடுமுறை.
  • கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 29/11/21 விடுமுறை – மாவட்ட ஆட்சியர்
  • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை(29.11.2021), நாளை மறுநாள் (30.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
  • கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் நாளை (நவ.29) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
  • கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (நவ.29) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
  • கனமழை காரணமாக நாளை (29.11.2021) கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பரமணியம் அவர்கள் அறிவிப்பு.
  • தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – கனமழை காரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
  • கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
  • கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட நிர்வாகம்.
  • கனமழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.29) விடுமுறை.
  • மற்ற பள்ளிகளில் மழை பாதிப்பு ஏற்பட்டால் அந்தந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்துக் கொள்ளலாம் – மாவட்ட கல்வித் துறை.
  • கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட நிர்வாகம்.
  • கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
  • கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை (நவ.29) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.