நவராத்திரி ஸ்பெஷல்: பால்பேடா!

thuth peda

பால்பேடா :

தேவையான பொருட்கள் :

பால் – 1 லிட்டர்
பட்டர் – 2 ஸ்பூன்
சீனி – 1 கப்
கார்ன் ஃப்ளார் – 11/2 டேபிள் ஸ்பூன்
பிஸ்தா பருப்பு – 25
பாதாம் பருப்பு – 10

செய்முறை :

பிஸ்தா பருப்பை துருவிக் கொள்ளவும் பாதாம் பருப்பை இரண்டாக நறுக்கி வைக்கவும் ஒரு அடி கனமான வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் நன்கு கொதிக்கத் தொடங்கியதும் அடுப்பைக் குறைத்து வைக்கவும். பால் முழுவதும் சுண்டி ஏடு வர ஆரம்பிக்கும் சமயம் சர்க்கரையைப் போடவும்.சீனி கரைந்ததும் கார்ன் ஃப்ளாரைப் போட்டு நன்கு கிளறவும்.

நன்கு கெட்டியான பதம் வரும் போது பட்டரை போட்டு அடுப்பிலிருந்து இறக்கி உருண்டைகள் பிடித்து அதன் மேல் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பை தூவினால் அருமையான பால்பேடா தயார்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :