Court - 2026

பள்ளிகளில் சிசிடிவி கேமரா! தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவு!

சற்றுமுன் உள்ளூர் செய்திகள் கல்வி சென்னை
Court - 2026

தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளி வளாகங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் தற்பொழுது பள்ளியில் நடக்கும் சமூகவிரோத சம்பவம் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு நிகழும் பாலியல் தொந்தரவுகளை கண்காணிக்க இந்த சிசிடிவி கேமராக்கள் பயன்படும் என்றும் தெரிவித்தார்.

இதை அனைத்து பள்ளிகளிலும் கொண்டுவர அரசு மேற்கொள்ள வேண்டும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

இது குறித்து புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முகம் என்பவர் மனு தாக்கல் செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியம் சமூக விரோத செயல்களில் இருந்து பள்ளிக்கூடத்தை பாதுகாக்கவும் இதற்கு உத்தரவிடக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு குறித்து விசாரணையின்போது அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான முந்தைய உத்தரவுகளை நிறைவேற்ற இதுவரை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை அளிக்கும் படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை மூன்று வாரத்திற்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.