வயிற்றுவலிக்கு காட்டச் சென்ற பெண்! மருத்துவர்கள் கூறிய செய்தியால் அதிர்ச்சி!

sineka

திருவாரூர் மாவட்டத்தில் வயிற்று வலியால் துடித்த மணமாகாத பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர் இதனால் அப்பெண்ணின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் அப்பரசன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் தம்பதிக்கு சினேகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) (25) என்ற வாய் பேச முடியாத காது கேட்காத ஒரு மாற்றுத்திறனாளி மகள் உள்ளார். சினேகா பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறார்.. அவருக்கு திடீரென அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது .

வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதற்கு யார் காரணம் என்று சினேகாவிடம் கேட்டுள்ளனர்.

கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று சினேகா கூறாத நிலையில் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மிகுந்த வருத்தத்திலும் கவலையிலும் உள்ளனர். இதையடுத்து அவரை வீட்டிற்கு அழைத்து வந்துனர்.

பல நாட்கள் தொடர்ந்து கேட்ட போதும் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது குறித்த சினேகா பெற்றோர்களிடம் தெரிவிக்கவில்லை. அவருக்கு பிரசவ காலமும் நெருங்கியது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இதையடுத்து சினேகா பெற்றோர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :