Home நலவாழ்வு கனவின் விளைவு! சிவப்பு சேலை அணிந்த பெண் வந்தால்…

கனவின் விளைவு! சிவப்பு சேலை அணிந்த பெண் வந்தால்…

dream-1

பூக்களை கனவில் கண்டால்:

பூவை கனவில் காண்பது பொதுவாக நன்மை உண்டாகும் என்று அர்த்தம்.

மஞ்சள் நிற பூக்களை கனவில் காண, மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும் என்று பொருள்.

தாமரை, வெள்ளைப் பூக்கள், பூமாலை, இவைகளைப் மற்றவர்களிடம் இருந்து பெறுவதாகக் கண்டால் பெரும் புகழ் வந்து சேரும்.

flowers

மல்லிகை பூவை கனவில் கண்டால் மிகவும் நல்லது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க போகிறது என்று அர்த்தம்.

வெண் தாமரை / வெள்ளை தாமரையை கனவில் கண்டால் சரஸ்வதி தேவியின் பரிபூரண அருள் கிடைக்கும். கல்வியில் உயர்வான நிலையை அடைவீர்கள்.

ரோஜா பூவை கனவில் கண்டால் நீங்கள் செய்த செயலுக்கு பாராட்டுகள் குவியும். மேலும் அனைத்து விதத்திலும் நன்மை உண்டாகும்.

முல்லை பூவை கனவில் கண்டால் அம்மா வழியில் தேவையான உதவிகள் கிடைக்கும்.

பன்னீர் பூவை கனவில் கண்டால் வெளியூர் அல்லது வெளி நாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

panneer-poo

பவளமல்லி பூவை கனவில் கண்டால் தந்தை வழி உறவுகளால் நன்மை ஏற்படும் என்று அர்த்தம்.

சாமந்தி பூவை கனவில் கண்டால் குடும்பத்தில் சுப நிகழ்சிகள் நடக்க போகிறது என்று அர்த்தம்.

வாடாமல்லி பூவை கனவில் கண்டால் உறவினர்களால் உதவி கிடைக்கும் என்று பொருள்.

அல்லி பூவை கனவில் கண்டால் மனைவி வழி உறவினர்களால் நன்மை ஏற்படும் என்று அர்த்தம்.

செடியில் இருந்து பூக்களை பறிப்பது போல கனவு கண்டால், நல்ல பலன்கள் கிடைக்கும். நிலம் வீடு, நகை வாங்கும் யோகம் ஏற்படும்.

red-saree

சிவப்பு நிறம் கொண்ட புடவையில் பெண்கள் கனவில் வந்தால் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

தேளை கனவில் கண்டால் வாதத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

ஒருவர் இறப்பது போல் கனவு கண்டால் புதிய நபர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

பணம் வருவது போல் கனவு கண்டால் மற்றவர்களுக்கு உதவும்போது கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

theel

வீட்டின் முன்பு பாம்பு புற்றில் பாம்பை காணுவது போல் கனவு கண்டால் வீட்டில் சுபக்காரியங்கள் தொடர்பான செயல்கள் கைக்கூடும் என்பதைக் குறிக்கின்றது.

நமக்கு பிடித்தவர்கள், நம்மை பிரிந்து சென்றவர்கள் கனவில் வந்தால் விரைவில் அவர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

bangle

வளையலை கனவில் கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

மிகவும் கஷ்டப்படுவது போல் கனவு கண்டால் மனதில் இருக்கும் கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

பொதுவாக இரவு 1 மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடம் கழித்து அந்த கனவு பலிக்கும். இரவு இரண்டு மணிக்கு கனவு கண்டால் அந்த கனவு 3 மாதத்தில் பலிக்கும். அதிகாலை வேளையில் கனவு கண்டால் அந்த கனவு உடனே பலிக்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

தோன்றும்…..

NO COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.