காணாமல் போன அண்டாவை கண்டுபிடிக்கும் துப்பறிவாளர்.. ஸ்டாலின்: ராஜேந்திர பாலாஜி!

சற்றுமுன்
rajendra-bhalaj-stalin

444 கொரோனா மரணங்கள் குறித்து ட்விட்டரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

444 மரணங்களை திடீரென ஒரே நாளில் கணக்கு காண்பித்தது குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் கடும் விமர்சனம் செய்திருந்தார். மேலும் அந்த 444 உடல்களும் முறையாக அடக்கம் செய்யப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “உலகையே இன்னும் குழப்பும் கொரோனா சார்ந்த சந்தேக மரணங்களை தீர்மானிப்பதில் தரவுகளின் ஆய்வுகளை பின்பற்ற வேண்டியிருந்தது. ICMRஐ ஆலோசித்து, தகுந்த வழிமுறைகளின்படி, வேறுபாடுகளை விசாரிக்க, முதல்வரே நிபுணர்குழு அமைத்து உத்தரவிட்டிருந்தார். அதில் வந்த முடிவுகளை ‌நமது அரசு சார்பில் நாமே அறிவித்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.