அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

Published:

health tips 1
health tips 1

ஈரல் குலைக்கட்டி கரைய…
நாட்டு முள்ளங்கியை இடித்து சாறெடுத்து அதில் அரை அவுன்ஸ் வெடியுப்பைச் சேர்த்துக் கலக்கி உள்ளுக்குக் கொடுத்து வர கட்டிகள் கரைந்து விடும்.

உடல் அழகு பெற…

கரு ஊமத்தை இலையைத் தூள் செய்து அதற்கு சம எடை சர்க்கரை சேர்த்து வேளைக்கு ஐந்து கிரெய்ன் வீதம் காலை, மாலை பாலில் சேர்த்து உட்கொள்ள உடல் வியர்வை உடல் தினவு நீங்குவதோடு உடல் அழகு பெறும்.

அடிக்கடி பொன்னாங்கண்ணிக் கீரையைச் சாப்பிட்டு வர உடல் உஷ்ணத்தைத் தணித்து உடலுக்கு பலம் தரும். உடலிலுள்ள சொறி. சிரங்குகளை நீக்கி பொன்னிற தேகத்தைக் கொடுக்கும். கண் சம்பந்தப்பட்ட வியாதிகளைக் குணப்படுத்தும்.

துளசியை சுத்தம் செய்து நன்றாக சுண்டக் கஷாயம் வைத்து வடிகட்டி பாலும் சர்க்கரையும் சேர்த்து அவ்வப்போது சாப்பிட்டு வர உடல் வலுப் பெறுவதோடு உடலில் ஒரு வித வனப்பும் தோன்றும்.

கஸ்தூரி மஞ்சள் சாற்றுக்கு கபத்தை மாற்றும் சக்தி உண்டு. குழந்தைகளை நீராட்டும் முன்பு உடலில் இச்சாற்றை தேய்த்து சற்று ஊற விட்டு குளிப்பாட்டினால் உடல் வளர்ச்சியும், முகத்தில் கவர்ச்சி யும் சுறுசுறுப்பும் உடலில் பொன்னிறமான பளபளப்பும் வந்தடையும்.

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உடல் பலமும் முக வசீகரமும் அழகும் பெற பத்து தூதுவளைப் பூவைக் கொண்டு வந்து கஷாயம் வைத்து பாலும் சர்க்கரையும் கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டு வர வேண்டும். சுக்கில நஷ்டம்
அடைந்தவர்களுக்கும் பலன் கிடைக்கும்.

சுக்கல விருத்தியாகி உடல் வனப்பும் பலமும் பெற தூதுவளைப் பூவை ஊற வைத்து குடிநீர் தயாரித்து சாப்பிட்டு வர மூன்று வாரங்களில் பலன் தெரியும்.

உடல் பலம் பெற…

நூறு எருக்கம் பூக்களை நன்றாக உலர்த்தி சாதிக்காய், இலவங்கம். சாதி பத்திரி வகைக்கு ஒரு தோலா சேர்த்து பன்னீர் விட்டரைத்து குன்றிமணி அளவுள்ள மாத்திரைகளாக்கி ஒரு நாளைக்கு ஒரு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர தாது விருத்தியும் உடல் பலமும் ஏற்படும்.

உளுந்தம் மாவைக் களி கிண்டி சாப்பிட்டு வர உடல் பலம் பெருகும். நெஞ்சு வலியும் வராது.

முருங்கை இலைகளை உருவிய பின் எஞ்சி நிற்கும் ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன்ே சாப்பிட்டு வர உடல் அசதி நீங்கி பலம் பெறும்.

அருகம்புல்லை வேரோடு சுத்தம் செய்து சிறிது நீர் சேர்த்து அம்ப ஒட்ட ஒட்ட அரைத்தெடுத்து சம அளவு வெண்ணெயையும் கலந்து காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் பலம் பெறும்.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட உடல் பலம் பெறும். கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். பார்வை தெளிவடையும். சொறி சிரங்கை ஆற்றும். அஜீரணத்தையும் போக்கும்.

வில்வப் பழத்தைக் கொண்டு வந்து அதன் சதைப் பாகத்தை எடுத்து அத்துடன் சீளாக் கற்கண்டையும் கலந்து காலை வேளை மட்டும் ஒரு கோலி குண்டளவு சாப்பிட்டு வர இரண்டு வாரங்களில் உடல் பலம் பெறும். அப்போது புளி, காரம் இல்லாமல் சாப்பிட்டு வர வேண்டும்.

வேப்பம்பூ ஓர் அவுன்ஸ், நில வேம்பு ஓர் அவுன்ஸ் இரண்டையும் இடித்து அதில் ஒரு டம்ளர் கொதி நீரை ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி சாப்பிட்டு வர உடல் பலமடையும். பலவீனம் மறையும்.

அரிசித் தவிட்டுடன் பனை வெல்லத்தைக் கலந்து சிறுசிறு உருண் டைகளாக வாயில் போட்டு சாப்பிட்டு வர இரண்டொரு வாரங்களில் நல்ல பலன் தெரியும்.

கல்யாணப் பூசணிக்காய் சாறு ஒரு டம்ளர் எடுத்த அதில் பனை வெல்லத்தைப் போட்டு கலக்கி ஒருநாள் விட்டு ஒரு நாள் சாப்பிட உடல் தளர்ச்சி, களைப்பு, மூளைச் சோர்வு அனைத்தும் குணமாகும்.

உடல் பெருக்க…

வேப்பம்பூவை ஊற வைத்து குடிநீர் தயாரித்து காலையில் பருகிவர சிறுக சிறுக உடல் பெருக்கும்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

பொன்னாங்கண்ணிக்கீரையை உலர்த்திப் பொடி செய்து 400 கிராம் தூளுடன் கடுக்காய்த் தூள் எழுபது கிராம் ஏலக்காய்த்தூள் 30 கிராம் சீனாக்கற்கண்டு 400 கிராம் கலந்து காலை மாலை நெய் விட்டுக் குழைத்து சாப்பிட்டு வர உடல் பருமனாகும். கண் ஒளி பிரகாசமடையும்.

உடல் பருமன் குறைய…

பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவரம்பருப்பு, மிளகு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர மூன்று மாதங்களில் உடல் பருமன் குறைந்து நல்ல ஆரோக்கியமாகவும் நல்வ தேஜசும் வீரிய விருத்தியும் உண்டாகும். நேத்திர ரோகமும் விலகும்.

ஸ்தூல சரீரம் கரைந்து கெட்டிப்பட நீல ஆலாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி துணியால் சலித்து வைத்துக் கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டு வர உடல் வற்றி கெட்டிப்படும்.

Related articles

Recent articles

spot_img