health tips - 2026

அப்பாச்சி தீர்வு: தொடை நரம்பு வலி, காதுவலி, சீழ், எலும்புருக்கி, சுளுக்கு..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

தொடை நரம்பு வலிக்கு…

150 கிராம் திப்பிலி, சம எடை இஞ்சி இரண்டையும் நன்றாக சிதைத்து அரை லிட்டர் கடுகு எண்ணெயில் போட்டு நீர் சுண்ட நன்குக் காய்ச்சி தொடை நரம்பு வலிக்கு வெளிப்பூச்சாகப் பூசி வர உபாதை குறையும். நாளடைவில் சரியாகும்.

எலும்புருக்கி நோய் சரியாக…

அரை லிட்டர் விளக்கெண்ணெயில் 50 கிராம் சோற்றுக்கற்றாழையின் சோற்றை மட்டும் ஊற வைத்து அரைத்துக் காய்ச்சி நீர் சுண்டியவுடன் இறக்கி காலை, மாலை ஒரு ஸ்பூன் அளவு உள்ளுக்குக் சாப்பிட்டு வர எலும்புருக்கி நோய் குணமாகும். ஆனால், இதனை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடாது.

சுளுக்கினால் வீக்கமா?

பலமான சுளுக்காக இருந்தால் அந்த இடம் வீங்கி விடுவதுண்டு. முருங்கைக்கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி அந்த இடத்தில் வைத்துக் கட்டி வர இரண்டொரு நாளில் குணமாகும்.

காதில் சீழ் வடிகிறதா?

பிரண்டை தண்டைப் பிழிந்து சாறெடுத்து இரு துளிகள் காதில் விட்டு வர உடனே குணமாகும்.

காது வலி குணமாக…

ஊமத்தம் பூவைக் கசக்கி சாறெடுத்து இரு துளிகள் காதில் விட்டு வந்தால் காது வலி குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.