health tips - 2026

அப்பாச்சி தீர்வு: மூலவாயு, அறிவு வளர, குஷ்டரோகம், பசி..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

பிணியின்றி வளர…

குழந்தைகள் எவ்வித பிணியுமின்றி சௌக்கியமாக வளர, அசோக மொட்டுக்களைக் கொண்டு வந்து தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி அவ்வப்போது இரண்டு பாலாடை புகட்டி வர தீய பிணிகள் எதுவும் குழந்தையை அண்டாது.

அறிவு விருத்தியடைய…

வேப்பம்பூ, இலுப்பைப் பூ, சிவனார் வேம்பின் பூ இவற்றை சம அளவு எடுத்து நசுக்கி கஷாயம் வைத்து தினமும் காலை. மாலை சாப்பிட்டு வர அறிவு நன்கு விருத்தியடையும். இதனால் பித்தப் பைத்தியம் குணமாகும்.

மூலவாயு சரியாக…

உலர்ந்த மாம்பூவுடன் சம அளவு சீரகம் சேர்த்து வறுத்து இடித்து சலித்து வைத்துக் கொண்டு இரண்டு சிட்டிகைப் பொடியை எடுத்து சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர மூல வாயு சரியாகும். இதனால் உஷ்ண பேதியும் நிற்கும்.

பசி, தீவனம் குறைகிறதா?

கர்ப்பிணிகள் சிலருக்கு மாதம் ஏற ஏற பசி தீவனம் குறையும். எட்டாம் மாதத்தில் அவ்வண்ணமிருந்தால் தாமரைப்பூவுடன், நெய்தற் கிழங்கையும் சேர்த்து அரைத்து பசும்பாவில் கொடுத்து வரவும். உடனே பசி எடுக்கத் தொடங்கி விடும்.

குஷ்ட ரோகத்துக்கு…

அல்லி மலர், அதன் தண்டு, வேர், மூன்றையும் உலர்த்தி தூள் செய்து பசும்பாலில் காலை, மாலை பருகி வர குஷ்டரோகம் குறையத் தொடங்கும். குஷ்டம் வராமலும் தடுத்து நிறுத்தும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.