health tips - 2026

அப்பாச்சி தீர்வு: மூலநோய், ஆசனவாய் அரிப்பு, புண், உஷ்ணக் காய்ச்சல்!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

மூலநோய் குணமாகும்.

முடக்கொத்தாள் வேரை நீரில் அலசி சுத்தப்படுத்தி பொடிப்பொடியாய்
நறுக்க வேண்டும். பின்பு ஒருகைப்பிடி அளவெடுத்துச்சட்டியிலிட்டு ஒருடம்ளர் தண்ணீர்விட்டு அடுப்பிலேற்றி நன்றாகக் காய்ச்சவும் நன்றாகக்கொதித்த பின்னர் இறக்கி வடிகட்டி காலையும் மாலையும் அரை டம்ளர் குடித்துவர மூலநோய் குணமாகும்.

ஆசனவாய் அரிப்பு

விளக்கெண்ணெயில் காஞ்சாங்கோரை இலையைப் போட்டு வாட்டவேண்டும். இளஞ்சூட்டில் இருக்கும்போது அந்த இலையை எடுத்து ஆசன வாயில் கட்டினால் அரிப்பு அகலும்.

ஆண், பெண் உறுப்பு புண்கள்

ஆண், பெண் உறுப்புக்களில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்த சுலபமான வழி ஒன்று உண்டு. குங்குமப் பூவுடன் தேனைக்கலந்து அரைத்து சாந்துபோலாக்கி புண்கள் உள்ள இடங்களில் பூசி வர ஒரு சில நாட்களிலேயே இப்புண்கள் ஆறிவிடும்.

எவ்வித்ககாய்ச்சலுக்கும்

சுண்டுவிரலில் பாதி அளவுக்கு இஞ்சியையும், ஒரு கைப்பிடி அளவுக்கு புதினாக் கீரையையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அவற்றை அம்மியில் வைத்து இடித்துசாறை எடுத்து சுத்தமான துணியில் வடிகட்டிக்கொள்ள வேண்டும். இதனுடன ஒரு தேக்கரண்டி அளவு சுத்தமான தேனைச் சேர்த்துக்குழப்பி உண்ணவேண்டும். உடனே வெதுவெதுப்பான வெந்நீர் குடிக்கவேண்டும். இவ்வாறு காலை, மாலை என ஆறு வேளை உண்டுவர எவ்விதக்காய்ச்சலும் குணமாகும்.

உஷ்ணக் காய்ச்சல்

ஒரு தேக்கரண்டி அளவு பச்சைக் கொத்தமல்லியையும், பெரிய நெல்லிக்காய் அளவுக்கு சுக்கையும், கைப்பிடி அளவுக்கு விஷ்ணு கிரந்தி இலையையும் எடுத்துக்கொண்டு அம்மியில் வைத்து தட்டவேண்டும்.

பின்பு அவற்றை ஒரு சட்டியில் போட்டு ஒன்றரை டம்ளர் தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து லேசான நெருப்பில் எரித்து கொதிக்க வைக்கவேண்டும். மூன்று டம்ளர் அளவுக்கு கஷாயம் போலானவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். அதை காலை, பகல், இரவுஎன மூன்று வேளைக்கும் பிரித்து அருந்திவரை உஷ்ணக் காய்ச்சல் குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.