பூடானில் ஹெலிகாப்டர் விழுந்து இந்தியர் உட்பட இருவர் உயிரிழப்பு!

இந்தியா உலகம் சற்றுமுன்
pudan 1 - 2026

பூடானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.

பூடான் நமது அண்டை நாடாக இருந்த போதும் அதன் எல்லைப் பகுதிகளை இந்திய ராணுவமே பாதுகாத்து வருகிறது. பூகோள ரீதியாக இப்பகுதி முக்கியத்துவமானது என்பதால் இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இதனால்தான் பூடானின் டோக்லாம் பகுதியை சீனா ஆக்கிரமிக்கவிடாமல் இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் பூடானின் பூன்ப்ஹூலா உள்நாட்டு விமான நிலையம் அருகே இந்திய ராணுவ ஹெலிகாப்டர் மலை மீது மோதி நொறுங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

pudan - 2026

இந்தியா மற்றும் பூடான் இடையே ராணுவ பயிற்சிகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று பூடானில் வெள்ளியன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது பனிமூட்டத்தினால் ஏற்பட்ட மோசமான வானிலையில் காரணமாக ஹெலிகாப்டரானது நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய அதிகாரி ஒருவரும், பயிற்சி பெறுவதற்காக விமானத்திலிருந்த பூடான் வீரர் ஒருவரும் பலியானார்கள் என்று தெரிய வருகிறது. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.