விக்ரம் லேண்டரை கண்டறிய மீண்டும் முயற்சி! நாசா வெளியிட்ட தகவல்!

Published:

isro chandrayaan2 - 2026

சந்திரனில் இரவாக இருந்தபோது, ​விக்ரம் லேண்டர் குறித்த தேடலில் நம்பிக்கை இல்லாதிருந்தது. ​இருளில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள் தெளிவான தகவலைத் தரவில்லை. ஆனால், இப்போது விக்ரம் லேண்டர் குறித்த நம்பிக்கை ஒளி மீண்டும் திரும்பியிருக்கிறது.

சந்திரயான் -2 உண்ட அனுப்பப் பட்ட விக்ரம் லேண்டர் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது என்று நம்பப் படுகிறது. சந்திரயான் -2 உடன் அனுப்பப் பட்ட விக்ரம் லேண்டரின் இடம் கண்டறியப்பட்டுள்ளது. அது தனக்கான பணியைச் செய்யும் சற்று முன்னதாக, இஸ்ரோ உடனான தொடர்பை இழந்தது. அதன் பின்னர் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் எந்த வெற்றியும் கிட்டவில்லை. இந்நிலையில் இப்போது மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

விக்ரம் லேண்டரின் இருப்பிடம் தெரிய வந்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார். ஆனால், அதன் சரியான இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், விக்ரம் இன்னும் சந்திரனின் மேற்பரப்பில் உள்ளதாக அறியப்படுகிறது.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!
Chandrayaan 2 - 2026

ஞாயிற்றுக்கிழமை, சந்திரயான் -2 இன் சுற்றுப்பாதையில் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டரின் புகைப்படங்களை எடுத்துள்ளது! இது விக்ரமின் இருப்பிடத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் சிவன். அவரது கூற்றுப்படி, இஸ்ரோ மீண்டும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறது. மறுபுறம், நாசாவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

எல்.ஆர்.ஓ உதவியுடன், சந்திரயான் 2, லேண்டர் விக்ரமின் தெளிவான படங்களை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாசாவின் எல்.ஆர்.ஓ, விக்ரம் லேண்டரைக் கடந்து சென்றது இது இரண்டாவது முறை. முன்னதாக கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று, நாசாவின் எல்.ஆர்.ஓ விக்ரம் லேண்டரின் படங்களை எடுத்தது. ஆனால் அந்த நேரத்தில் நிலவில் ஒளி இன்றி, இருள் சூழ்ந்திருந்தது. ஆனால், இந்த முறை மறு புறம் என்பதால், படங்கள் முன்பு எடுக்கப் பட்டதை விட வெளிச்சத்தில் சற்று தெளிவாக எடுக்கப் பட்டுள்ளன.

விஞ்ஞானிகள் தற்போது எல்.ஆர்.ஓ புகைப்படங்களை ஆராய்ந்து வருகின்றனர். புகைப்படங்களின் உதவியுடன், விக்ரம் லேண்டரின் சரியான நிலையைக் கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்ரமின் சரியான இடம் கண்டுபிடிக்கப்பட்டால், அது விஞ்ஞானிகளுக்கு ஒரு பெரிய வெற்றியாக அமையும். இதற்குப் பின்னர், இஸ்ரோவுடனான தொடர்பு இழக்கப்படுவதற்கு சற்று முன்னர், லேண்டர் விக்ரமுக்கு என்ன ஆனது என்பதைக் கண்டறிய முடியும்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

செப்டம்பர் 7 ஆம் தேதி, சந்திரயான் 2 இன் லேண்டர் விக்ரம் சந்திரனின் மேற்பரப்பில் மென்மையான தரையிறங்கலைத் தவறவிட்டது. அப்போதிருந்து, இஸ்ரோவுடனான தொடர்பை இழந்தது. தொடர்பு துண்டிக்கப் பட்ட போது, ​​விக்ரம் சந்திரனில் இருந்து 2.1 கிமீ., தொலைவில் இருந்தது.

விக்ரம் லேண்டர் கடினமான தரையிறக்கம் மேற்கொண்டதால், அது தொடர்பை இழந்தது. ஆயினும், அதன் பிறகான அடுத்த 14 நாட்களில் விக்ரமைத் தொடர்பு கொள்ளலாம் என்று இஸ்ரோ நம்பியது.

இருப்பினும், சந்திரனில் இரவு வந்துவிட்டதால் அதன் பிறகு நம்பிக்கையை அனைவரும் இழந்தனர். இந்த நேரத்தில் சந்திரனில் அந்தப் பகுதியில் ஒளி ஏற்பட்டுள்ளது. எனவே விக்ரமின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img