நீங்க 10 ஆம் வகுப்பு பாஸா? ரயில்வேயில் இருக்கு வேலை பேஷா!

இந்தியா வேலைவாய்ப்பு
train - 2026

தென்னக ரயில்வேயில் அப்பரண்டீஸ் பயிற்சி பெற 10வது முடித்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரயில்வேயில் பணிபுரிய வேண்டும் என்பது பலருக்கும் கனவாக இருக்கும். ஆனால் அதற்கு முறையான அப்பரண்டீஸ் பயிற்சி பெற்றால் வாய்ப்புகள் கிடைக்கும். எனவே டிசம்பர் 31ம் தேதிக்கு விண்ணப்பித்தால் வாய்ப்பு உண்டு.

தென்னக ரயில்வேயில் 3655 இடங்களுக்கு அப்பரண்டீஸ் பயிற்சி பெற 10ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஐடிஐ பாஸ் செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

train 1 - 2026

தெற்கு ரயில்வே பிட்டர், வெல்டர் மெக்கானிக், எலக்ட்ரீசியன், டீசல் மெக்கானிக், ஏசி, பிரிட்ஜ் மெக்கானிக், எம்எம்வி, எலெக்ட்ரானிக் மெக்கானிக், பிஏஎஸ்எஸ்ஏ (passa), எம்எல்டி ரேடியாலஜி, எம்எல்டி கார்டியாலஜி, கார்பெண்டர், பெயிண்டர், வயர்மேன், டர்னர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஒராண்டு முதல் இரண்டு ஆண்டு அப்பரண்டீஸ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி: 10 ம் வகுப்பு படித்தவர்கள் பொது பிரிவினருக்கு 15 வயது முதல் 22 வயது வரை இருக்கலாம், ஒபிசி பிரிவினருக்கு 15 வயது முதல் 25 வயது விண்ணப்பிக்கலாம். எஸ்சி எஸ்சி பிரிவினர் 15 முதல் 27 வயது வரை விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் 15 முதல் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம்

sra vacancy - 2026

ஐடிஐ படித்தவர்கள் என்றால் பொதுபிரிவினர் 24 வயது வரையும், ஒபிசி பிரிவினர் 27 வயது வரையும், எஸ்சி எஸ்டி பிரிவினர் 29 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் 34 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் www.sr.indianrailways.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுமுறை: இதற்கு தேர்வு இல்லை. 10வது மற்றும் ஐடிஐயில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள். வெளிமாநிலத்தவர் இதில் கலந்து கொள்ள முடியாது. விண்ணப்பிக்க 31.12.2019 தான் கடைசி . அதாவது நாளை மாலை 5 மணி தான் கடைசி நேரம். அதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மாதம் உதவித்தொகையாக 10 ஆயிரம் ரூபாய் தரப்படும். இந்த அப்பரண்டீஸ் பயிற்சி முடிப்பவர்களுக்கு வேலை உறுதியாக தென்ன ரயில்வே தரும் என உத்தரவாதம் தரவில்லை. அதேநேரம் லெவல் 1 தேர்வு நேரடி சேர்க்கையின் போது 20 சதவீதம் வேலைக்கு அப்பரண்டீஸ் பயிற்சி பெற்றவர்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.