டூவீலரில் சென்றது பிரியங்கா! அபராதம் எனக்கா! குமுறும் வாகன உரிமையாளர்!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள்
priyanka vadra1 - 2026

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஐ.பி.எஸ்அதிகாரி எஸ்.ஆர்.தாராபுரி (வயது 76) கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவரின் குடும்பத்தினரைச் சந்திப்பதற்காகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டிசம்பர் 28-ம் தேதி காரில் சென்றார். அவரைத் தடுத்து நிறுத்திய போலீஸார் மேற்கொண்டு அவரை அனுமதிக்கவில்லை.

இதையடுத்து பிரியங்கா காந்தி ஸ்கூட்டரில் பயணமானார். ஜாஹஜ்பூரைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ இருசக்கர வாகனத்தை ஓட்டிச்செல்ல பிரியங்கா காந்தி பின்னால் அமர்ந்து சென்றார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. பிரியங்காவின் இந்தச் செயலுக்கு பாராட்டுகளும் விமர்சனங்களும் எழுந்தன. ஹெல்மெட் அணியாமல் குர்ஜார் ஸ்கூட்டர் ஓட்டிச்சென்றது விமர்சனத்துக்குள்ளானது.

priyanka - 2026

உத்தரப்பிரதேச போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காகவும் விதிமுறைகளை மீறி வாகனத்தை இயக்கியதற்காகவும் சுமார் 6,300 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

குர்ஜார், பிரியங்கா காந்தி இருவரும் பயணம் செய்த ஸ்கூட்டர் ராஜ்தீப் சிங் என்பவருடையது. இதனால் 6,300 ரூபாய் அபராத தொகையை ராஜ்தீப் தன் சொந்த பணத்தில் கட்டவுள்ளார்.

லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்கு ரூ.2,500, ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு ரூ.500, ஒழுங்கற்ற முறையில் வாகனத்தை ஓட்டிச் சென்றதற்கு ரூ.2,500 எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் அபராதம் விதித்துள்ளனர். இதற்காக காங்கிரஸ் கட்சியிடமிருந்து தொகையை வாங்கவில்லை.

இதுகுறித்து பேசிய ராஜ்தீப் சிங், “நான் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது தீரஜ் குஜ்ஜார் மற்றும் பிரியங்கா காந்தியைப் பார்த்தேன். தீரஜ் என்னுடைய வாகனம் வேண்டும் என்று கேட்டார். பிரியங்கா காந்தி பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்

அதனால் நான் மறுக்காமல் வண்டியைக் கொடுத்தேன். டிசம்பர் 29-ம் தேதிதான் என் வண்டிக்கு அபராதம் விதித்தது செய்தி மூலம் தெரிந்துகொண்டேன். 6,300 ரூபாய் அபராதம் விதித்தனர். என்னுடைய பணத்தைக் கொண்டே இதைச் செலுத்துவேன். என்னால் பிரியங்கா அல்லது காங்கிரஸ் கட்சியிடமிருந்து இந்தப் பணத்தைப் பெற முடியாது” என்றா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.