அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்தச் சட்டம்! அரசாணை வெளியீடு!

Published:

caa nrc npr - 2026

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது. ஜனவரி 10ம் தேதி முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது!

குடியுரிமை சட்ட திருத்த விதிகள் அனைத்தும் ஜன.10ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை அடுத்து, நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச்சட்டம் (CAA) அமல் செய்யப் பட்டுள்ளது.

காங்கிரஸ், திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இஸ்லாமியர்களிடம் பொய்ப் பிரசாரம் செய்து, பீதியை ஏற்படுத்தி பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்ட நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிஏஏ சட்டத்தை அமல்படுத்த குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று உள்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமல் செய்யப் படுவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்…

notification caa - 2026

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, 2014 டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு குடியுரிமை அளிப்பதுதான் இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் நோக்கம். இதை அடுத்து இன்று முதல், இந்த சிறுபான்மை மக்களுக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்கும்.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இதனை எதிர்த்து 59 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குடியுரிமை திருத்தச் சட்ட அமலுக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அரசமைப்புச் சட்டப்படி செல்லுமா என ஆராய முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் முறைப்படி அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ள முஸ்லிம் அல்லாத பிற மதத்தினர் இந்தியக் குடியுரிமை பெறலாம் என்றும், ஜனவரி 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற மாட்டோம் என்றும், ஓர் அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

Related articles

Recent articles

spot_img