குப்பைத் தொட்டில் நாட்டு வெடிக்குண்டு! ஒருவர் காயம்!

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
bom 1 - 2026

புதுச்சேரியில் குப்பைத் தொட்டியில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பேப்பர் சேகரிக்கும் தொழிலாளி காயம் அடைந்தார்.

புதுச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டை காட்டாமணி குப்பம், பெருமாள் நாயுடு வீதி சந்திப்பில் பேப்பர் சேகரிக்கும் தொழிலாளி ஒருவர் அங்கு இருந்த குப்பை தொட்டியில் பேப்பர் எடுத்து கொண்டிருந்தார்.

bome - 2026

அப்போது குப்பை தொட்டியில் இருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

நாட்டு குண்டு வெடிப்பு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.