சிவாஜி-மோடி ஒப்பீடு! தென்னாட்டு காந்தி போல் ஒப்பிடவில்லைதான்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
modi sivaji - 2026

இந்தியாவின் நெப்போலியன் யார்? தென்னாட்டு காந்தி யார் என்றெல்லாம் ஒப்பிட்டு புத்தகங்கள் எழுதிவிட்டு, ஒரு மதிப்பெண் கேள்விகள் எல்லாம் கேட்டு மாணவ இளைய சமுதாயத்தை மோசமாக்கி வைத்திருக்கும் வரலாற்றாளர்கள் மத்தியில், அதே போன்றதொரு புத்தகத்துக்கு எதிர்வினைகளை எதிர்கொண்டிருக்கிறார் வடக்கத்தி வரலாற்றாளர் ஒருவர்.

மகாராஷ்டிராவில் பாஜகவை சேர்ந்த ஜெய் பகவான் கோயில் என்பவர் இன்றைய சிவாஜி நரேந்திர மோடி என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் மோடியை சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார்

இது குறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறியபோது மோடியை நாங்கள் மதிக்கிறோம். அதேநேரம் சிவாஜியுடன் அவரை ஒப்பிட முடியாது! அதை ஏற்கவும் முடியாது!

மோடியை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று நாவால் ஷுவைத் துடைப்பவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்!அவர்களால்தான் மோடிக்கு கெட்ட பேர் ஏற்படுகிறது இது போன்றவர்களிடமிருந்து அவர் விலகி இருக்க வேண்டும்

இந்தப் புத்தகத்துக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பாஜக அறிவிக்க வேண்டும்! இந்த புத்தகத்தை தடைசெய்யவேண்டும்.

தற்போது பாஜகவில் உள்ள சிவாஜியின் குடும்பத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பி சம்பாஜி ராஜே மற்றும் முன்னாள் எம்பி உதயராஜ் போன்ஸ்லே இதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்

அதன்படி சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ வான சிவராஜ் போன்ஸ்லே இதுகுறித்து கருத்து தெரிவித்தபோது தனிப்பட்ட பலனை பெறுவதற்காக சிலர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளனர

சிவாஜியுடன் மோடியை ஒப்பிடுவது ஏற்க முடியாது இது போன்றவர்களை கட்சி கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்

இந்த பிரச்சினை குறித்து பாஜக ஊடகப் பிரிவு தலைவர் துணைத் தலைவர் சஞ்சய் முழுக் தெரிவித்தபோது இந்தப் புத்தகத்துக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை இது புத்தகத்தை எழுதி அவரின் தனிப்பட்ட கருத்து இது தொடர்பாக இதை எழுதிய ஜெய் பகவான் கோயிலுடன் பேசினேன் சம்பந்தப்பட்ட பகுதியை நீக்குவதற்கு தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் என்று கூறினார்

இந்த புத்தகம் எழுதிய ஜெய் பகவான் கோயில் இதுகுறித்து கூறியபோது, சத்ரபதிசிவாஜி பிரதமர் மோடி அனைவரையும் எப்படி அரவணைத்து செயல்படுகிறார்! மற்றவர்களால் முடியாததை மோடி எப்படி நடத்திக் காட்டுகிறார் என்பதை குறிக்கும் வகையிலேயே இதை எழுதினேன்

ஆனால் சிலர் குறிப்பிட்ட பகுதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் மற்றவர்கள் மனம் புண்படும் வகையிலான வாசகங்கள் வார்த்தைகளை நீக்குவதற்கு தயாராக உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.