கழிப்பறைக்கு சென்ற 10 வயது சிறுமி! கதற கதற சமையல் காண்ட்ராக்டர் செய்த வன்கொடுமை!

இந்தியா கிரைம் நியூஸ் பொது தகவல்கள்
vankodumai - 2026

ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் நிச்சயதார்த்த விழாவின் போது திருமணமண்டபத்தின் கழிப்பறையில் பத்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

முரளிபுராவில் உள்ள திருமணமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை பத்து வயது சிறுமி பெற்றோருடன் திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்ற போது இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவத்தன்று திருமண மண்டப கழிப்பறையில், சிறுமியை வாயைப்பொத்தி சமையல் காண்ட்ராக்டர் பாலியல் பலாத்காரம் செய்தார்.

கழிப்பறைக்கு அருகில் கச்சேரி நடந்ததால், சம்பவத்தின் போது பெண் குழந்தையின் அலறல் குரலை யாராலும் கேட்க முடியவில்லை. நீண்ட நேரமாக சிறுமியை காணாத குடும்பதினர்கள் சிறுமியைத் தேடியபோது, திருமண மண்டபத்தின் கழிப்பறையில் அவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார்.

இதன் பின்னர், சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அங்கு சமையலர் கைது செய்யப்பட்டார். இதில் மேலும் சில சமையல் காரர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்து அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.