sant ravidass - 2026

பிப்ரவரி 9 – சந்த் ரவிதாஸ் பிறந்த நாள். சமுதாய புரட்சிக்காக குரல் கொடுத்தவர் சந்த் ரவிதாஸ்.

இந்தியாவின் தத்துவ புரட்சியில் பக்தி கவிஞர்களின் பங்கு அதிகம். கபீர்தாஸ், ரவிதாஸ் போன்றோரிடம் இருந்து அம்பேத்கர் போன்றோர் ஊக்கம் பெற்றார்கள்.

ரவிதாஸ் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை விரும்பினார். மனிதாபிமான சுகந்தத்தை பரப்பும் கவிதை மலர்களை படைத்தார். மனிதத்தன்மையை நிலைநாட்டுவதில் குலம் மதம் போன்றவை குறுக்குச் சுவராக நிற்கக்கூடாது என்று எச்சரித்தார்.

தாம் வாழும் காலத்தில் பலரையும் தம் கருத்துக்களால் தாக்கம் ஏற்படுத்தி முன்னேற்றப்பாதையில் செலுத்துபவர்களே வரலாற்றுத் திருப்பங்களில் நின்று வருங்கால சந்ததிக்கு வழிகாட்டுபவர்கள். அப்படிப்பட்டவர்களுள் சந்த் ரவிதாஸ் ஒருவர்.

அதனால்தான் அவருடைய தொண்டர்கள் ரவிதாசின் தங்கச் சிலையை ஜலந்தரில் இருந்து காசி வரை சுமந்து வந்தார்கள். தற்போது அவருடைய கருத்துக்களின் தாக்கம் பஞ்சாப் முதல் நாடெங்கும் பரவி உள்ளது.

ரவிதாஸ் தன் கவிதைகளில் ஆன்மிகத்தை மட்டுமின்றி சமுதாய கருத்துக்களையும் பாடியுள்ளார். அடிமை தன்மையை எதிர்த்தார். மனதாலோ உடலாலோ குலம் மதம் மூலமாகவோ பிறருக்கு அடிமையாகாமல் மனிதன் சுதந்திரமான எண்ணங்களுடன் சுய கௌரவத்துடன் வாழ வேண்டும். தலை குனிந்தவாறு வாழ வேண்டாம் என்று கவிதைகள் மூலம் எடுத்துரைத்தார். தொழிலாளிகளையும் தலித்துகளையும் கடைநிலை மக்களையும் புரட்சி கவிஞர்கள் மிகவும் கவர்ந்தனர்.

ALSO READ:  செங்கோட்டை சார்லப்பள்ளி இடையே சிறப்பு ரயில்!

சந்த் ரவிதாஸ் 1450 பனாரசில் பிறந்து 1520 வரை வாழ்ந்ததாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். ரவிதாஸ் கபீருடைய சமகாலத்தவர் என்று கருதப்படுகிறார். மீராபாய் ரவிதாசரின் ஆதரவாளராக இருந்தார் என்று தெரிகிறது. ரவிதாஸ் தோல் பதனிடும் தொழில் செய்து வந்தார். அவருக்கு காசி மகாராஜாவும் மகாராணியும் கூட சீடர்களானார்கள்.

பௌத்த தம்ம சூத்திரத்தின் சித்தாந்த சாரம் அனைத்தும் ரவிதாஸன் கவிதைகளில் காணப்படுகின்றன!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending