பெண்களே இயக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்! மகளிர் தின ஸ்பெஷல்!

இந்தியா லைஃப் ஸ்டைல்
train fully ladies3 - 2026

எங்களுக்கு நிகர் யாருமில்லை… என்றனர்.
பெண்களுக்கு இணை யாருமில்லை…
கிருஷ்ணா எக்ஸ்பிரஸ் ரயிலை நடத்திய பெண் ஊழியர்கள்.
ரயிலில் அனைத்து பணிகளிலும் பெண்களே!
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி விஜயவாடா டிவிஷனில் அரிதான பெருமை.

ஆண்களுக்குச் சமமாக திறமையோடு பணிகளைச் செய்துகொண்டு எங்களுக்கு நிகர் யாருமில்லை என்று நிரூபித்து வருகிறார்கள் விஜயவாடா ரயில்வே ஸ்டேஷனில் பணிபுரியும் மகளிர் ஊழியர்கள்.

train fully ladies1 - 2026

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி சவுத் சென்ட்ரல் ரயில்வே விஜயவாடா டிவிஷனில் இந்த மாதம் 1 முதல் 10ம் தேதி வரை சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

அவற்றில் ஒரு பகுதியாக விஜயவாடா டிவிஷனில் முதல் முறையாக முழுமையாக மகளிர் ஊழியர்களோடு அதிலாபாதிலிருந்து திருப்பதி செல்லும் கிருஷ்ணா எக்ஸ்பிரஸ் 17406 ரயிலை நடத்தினார்கள்.

வெள்ளிக்கிழமை விஜயவாடாவில் ஊழியர்கள் பணி மாறினார்கள். லோகோ பைலட், கார்டு, டிடிஓ, ஸ்குவாட், ஆர்பிஎஸ் ஊழியர், பாயிண்ட் உமன், ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் பிற பிரிவுகளில் முழுமையாக மகளிர் ஊழியர்களே பணிபுரிந்தார்கள்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!
train fully ladies - 2026

இந்த ரயில்வே பணிகளில் பங்கு பெற்ற லோகோ பைலட் சாந்தி, கார்டு ஆர். ராதா, ஆர்பிஎஃப் ஹெட் கான்ஸ்டபுள்கள் எஸ். ஷ்யாமளா, எஸ்.சிவகுமாரி, தனகுமாரி, சிடிஐகள் கே. கிருஷ்ணவேணி, உமாமகேஸ்வரி, அருணா குமாரி, நாகலட்சுமி, சந்து ராதிகா, கே.எல் பிரசன்னா போன்றவர்களை டிஆர்எஸ் பி. ஸ்ரீனிவாஸ் பாராட்டிப் பேசினார்.

விஜயவாடா டிவிஷனில் முதல் முறையாக இந்த அரிதான கௌரவத்தை சாதித்தது தமக்கு பெருமையாக உள்ளது என்று தெரிவித்தார். மகளிர் ஊழியர்கள் ஆண்களுக்கு சமமாக பணிகளில் திறமையை காட்டி வருகிறார்கள் என்று பாராட்டினார்.

train fully ladies2 - 2026

விஜயவாடா ரயில்வே பிஆர்ஓ நஸ்ரத் எம். மண்ட்ரூப்கர், எஸ்எம் சுனைனா, பாயிண்ட்ஸ் உமன் நஜ்மா விஜயவாடாவில் கொடியசைத்து எக்ஸ்பிரஸ் ரயிலை ஆரம்பித்து வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.