December 6, 2025, 3:10 AM
24.9 C
Chennai

‘இப்படித்தான் ஒருமுறை கருணாநிதி…’ : திமுக.,வினரின் அக்கப்போர்களை கலாய்த்த நெட்டிசன்ஸ்!

karunanidhi 96 - 2025

இப்படித்தான் ஒருமுறை கருணாநிதி .. என்று தலைப்பிட்டு,  வரிசையாக ஒவ்வொரு புனை கதையாகப் பதிவு செய்து கலாய்த்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்!

தமிழகத்தில் பொய்களைப் புனைந்து சினிமா மோகத்தை சாதகமாக்கி மக்களிடம் அதிகம் பரப்பி அரசியல் செய்த திராவிட இயக்கங்களின் வரிசையில் திமுக.,வுக்கு மிகப் பெரும் பங்கு உண்டு. அதன் தலைவர் ஆகிக் கொண்ட மு.கருணாநிதி இவற்றில் வல்லவராய்த் திகழ்ந்தவர். முத்தமிழ் விற்ற முதுபெரும் தமிழ் வியாபாரியான கருணாநிதியின் 96 வது பிறந்த நாளில் நெட்டிசன்கள் பலர் கலாய்த்து மகிழ்ந்தனர்.

இதை ஒட்டி டிவிட்டர் பதிவுகளில் சில ஹேஷ்டேக்குகள் பிரபலமாயின. குறிப்பாக, கருணாநிதியால் தான் சமூக நீதி கிடைத்தது, கருணாநிதியால்தான் நாங்கள் வாழ்க்கையே நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பன போன்ற கதைகளை காலம் காலமாக சமூகத்துச் சொல்லிக் கொண்டிருந்தவர்களை எல்லாம் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள் சமூக வலைத்தள சமூக விழிப்பு உணர்வு கொண்ட அறிஞர்கள்.

அவர்களின் பதிவுகளில்… இப்படித்தான் ஒருமுறை கருணாநிதி …. என்ற தலைப்புடன் கூடிய பதிவுகள் பிரபலமாயின.  அவற்றில் சில…

***

இப்படித்தான் ஒரு முறை கருணாநிதி வரிசையில் இன்னொரு வரலாறு …

படித்தவுடன் சிரிக்க கூடாது

முன்பு ஒரு முறை கருணாநிதி வெளியூர் பயணத்தை முடித்து கொண்டு ரெயில் ஏற இருந்தார்.

அப்பொழுது அவரது அரசாங்கம் டிஸ்மிஸ் செய்யப்பட்ட செய்தியை அறிந்தார். உடனே அவர் சொந்த காசில் டிக்கெட் வாங்கி சென்னை வந்து சேர்ந்தார். சென்னையில் அவருக்காக காத்திருந்த அரசாங்க காரை தாண்டி சென்று ஆட்டோ பிடித்து கோபாலபுரம் வந்து சேர்ந்தார்.

இன்று கருணாநிதியின் பிறந்த நாள். இது போன்ற தலைவர்களை இனிமேல் எங்கு காண்போம்.

***

இப்படித்தான் ஒருமுறை கருணாநிதி வரிசையில் இன்னொரு பதிவு…

karunanidhi - 2025***

இதையும் ;சிரிக்காமல் படிக்கவும்.. இப்படித்தான் ஒரு முறை கருணாநிதி வரிசையில் இதையும் சேர்த்து கொள்ளவும் .. அடேய் ஊ பிஸ் உங்கள் அக்கப்போருக்கு ஒரு அளவேயில்லை

—-

சுனாமி வந்த சமயம் நள்ளிரவில் கலைஞருக்கு திடீர் உடல் நலக்குறைவு! வீட்டில் லிப்ட் இல்லை.

மூச்சுத்திணறலால் முதலுதவி செய்து வாழைத்தாரைப் போல அப்பல்லோ மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு செல்கிறார்கள்!

துரைமுருக‌னும், ஸ்டாலினும் மருத்துவமனை செல்லும்வரை தாங்குமா? என அழுதுகொண்டே பின் தொடர்கிறார்கள்!

பரிசோதித்த மருத்துவர் நெஞ்சு சளி நிறைய உள்ளது. எக்ஸ்ரே செய்ய அறிவுறுத்துகிறார்!

எக்ஸ்ரே அறையில் தொழில்நுட்ப நபர், ஐயா அசைந்தால் எக்ஸ்ரே படம் சரியாக வராது! எனவே நான் சொல்லும்பொழுது மூச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார்!

அதற்கு கலைஞர் அவர்கள்,

“மூச்சை நிறுத்தக் கூடாதுன்னு தானே இங்கே வந்திருக்கேன்” என்றாராம்!

மரணப்படுக்கையிலும் கலைஞரின் நக்கலும், நையாண்டியும், டைமிங்கும் எவருக்கும் வராது!

#நான்_கலைத்துறையில்_கண்டு_வியந்த_ஒப்பிலா_மனிதன்!

#மு_கருணாநிதி

***

karunanidhi2 - 2025

***

சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியனின் பதிவு… சிரிக்காமல் படிக்கவும்…

இப்படிதான் ஒரு முறை கருணாநிதி வரிசையில் இதையும் சேர்த்து கொள்ளவும் ..

———————

தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் முதலமைச்சரான புதிதில் ஒரு முறை வெளியூர் சென்றார்..
.
இரவு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அரசு அலுவல் பார்த்து கொண்டும் கடிதங்கள் எழுதிக்கொண்டும் இருந்தார்…
.
பிறகு தன் பெட்டியில் இருந்து இன்னொரு மெழுகுவர்த்தி எடுத்து வைத்துக்கொண்டு முன்னதை அணைத்துவிட்டு,அடுத்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எழுத ஆரம்பித்தார்.
.
என்ன விஷயம் என்று உதவியாளர் கேடக்க…
.
முன்னே அரசு வேலை பார்த்துக்கொண்டு இருந்தேன் அதற்கு அரசின் மெழுகுவர்த்தி…
.
இப்போது எழுதும் கடிதம் சொந்த வேலை. அதனால் என்னுடைய விளக்கை ஏற்றி வைத்து கொண்டு அரசு விளக்கை அணைத்துவிட்டேன்” என பதிலளித்துள்ளார்….
.
இனி இவர்களைப் போன்ற தலைவர்களை அரசியல் களத்தில் காண்பது அரிது..
.
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் தலைவா…

படித்ததில் காறித்துப்பியது.

***

கலைஞர் ஒரு முறை காரில் சென்று கொண்டிருந்தார் !

பின்னாடி ஒருவர் வேகமாக ஓடி வந்தார் !

யாரு கழக தொண்டரா ?

இல்ல கார் ஓனரு ..

#HBDFatherOfCorruption

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories