சென்னையில் இருந்து நேற்று புறப்பட்டு இன்று காலை செங்கோட்டை வந்து சேர்ந்த பொதிகை விரைவு ரயில் எஞ்சினில் திடீரென புகை கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கோட்டை வந்த பொதிகை ரயிலை மதுரையில் ஓட்டுனர்கள் அழகிரி, செய்யது சுலைமான் ஆகியோர் ஓட்டி வந்தனர். செங்கோட்டை ரயில் நிலையம் அருகிலுள்ள ரயில்வே கேட் அருகில் வரும் போது இரண்டாவது எஞ்சினில் பிரேக் பகுதியில் இருந்து தீ உருவாகி திடீரென புகை வந்தது.
இதனால் பரபரப்படைந்த கேட் கீப்பர், ஓட்டுநர்களை எச்சரிக்க, உடனே ரயில் மெதுவாக நிறுத்தப் பட்டது. ரயிலை பாதுகாப்பாக நிறுத்திய ஓட்டுநர்கள், உடனடியாக பாதுகாப்பு இயந்திரங்கள் மூலம் தீ பரவாமல் தடுத்தனர். பின்னர் தீ முழுவதுமாக அணைக்கப் பட்டு பின்னர் மெதுவாக ரயில் நிலையத்தில் ரயில் கொண்டுவந்து நிறுத்தப் பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




