பாலிடெக்னிக் பட்டயத் தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இந்த தேர்வு முடிவுகளை http://www.tndte.gov.in இல் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகளை ஆன் லைனில் செக் செய்வது சுலபம். தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் அதிகாரபூர்வ இணையதளங்களான tndte.gov.in, intradote.tn.nic.in ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் சென்று ‘ரிசல்ட்’ என குறிப்பிட்டிருக்கும் பகுதியை க்ளிக் செய்யவும். தொடர்ந்து உங்களது பதிவு எண்ணை சமர்ப்பித்தால், தேர்வு முடிவு கிடைக்கும். அதனை ஸ்க்ரீன் ஷாட் அல்லது டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு முழுவதும் பாலிடெக்னிக் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் ஆன் லைனில் முயற்சி செய்வதால், மேற்படி இணையதளங்கள் திணறி வருகின்றன. இதனால் திடீரென அவை முடங்கியும் விடுகின்றன. மாணவர்கள் பொறுமையாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.



