பான் – ஆதார் சமர்ப்பிக்க தவறினால்… 20% வரி செலுத்த வேண்டும்!

இந்தியா உரத்த சிந்தனை தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல் வணிகம்
pan aathar - 2026

பான்-ஆதார் சமர்ப்பிக்கவும், தவறும்பட்சத்தில் 20% வரி செலுத்த வேண்டும்!

நீங்கள் பான்-ஆதார் விவரங்களை மறைக்கிறீர்கள் அல்லது கொடுக்கவில்லை என்றால் நீங்கள் பெரிய இழப்பைs சந்திக்க நேரிடும். இதுகுறித்து நீங்கள் சரியான தகவல்களை வழங்க வில்லை என்றால், இப்போது நீங்கள் 20% வருமான வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

அடுத்து, ஆதாருடன் இணைக்காத பான் கார்டுகள் மார்ச் 31ஆம் தேதிக்குப் பின்னர் செயல்படாது. மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி – CBDT) விதியின் படி, ஒரு டிடிஎஸ் (TDS) விலக்குக்காக இந்த இரண்டு ஆவணங்களின் விவரங்களையும் வேலை செய்பவர் தனது நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

எந்தவொரு ஊழியரும் தனது முதலாளிக்கு பான் (PAN Card) அல்லது ஆதார் எண்ணைக் (Aadhaar number) கொடுக்கவில்லை என்றால், அவர் தனது வருமானத்திற்கு 20% வரி செலுத்த வேண்டும். இந்த விதி சிபிடிடியின் (CBDT) சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையின் படி, வருமான வரிச் (Income tax Act) சட்டத்தின் 206 ஏஏ பிரிவில், ஊழியர் பெறும் வரிவிதிப்புத் தொகை குறித்து பான் மற்றும் ஆதார் விவரங்களை வழங்க வேண்டியது கட்டாயமாகும். இல்லையென்றால், உங்கள் வருமானத்தில் இருந்து வரியை நிறுவனம் கழிக்க முடியும். ஒட்டுமொத்தமாக வருமானத்தில் 20% வரியைக் கழிந்துக் கொள்ளலாம். தவறான விவரங்களை வழங்கினால் அபராதம் விதிக்கப்படும்!

வரி செலுத்துவோர் தங்கள் வருமானத்தைக் குறித்த விவரங்கள் மற்றும் பான்-ஆதார் விவரங்கள் முற்றிலும் சரியானவையாக இருக்க வேண்டும்.

இந்தச் சட்டத்தின்படி, உங்கள் நிறுவனத்திடம் விவரங்கள் சரியாக இல்லாவிட்டால் டிடிஎஸ்.,ஸை (TDS) மிக அதிக விகிதத்தில் கட்ட வேண்டி இருக்கும். ஒரு வேளை நீங்கள் தவறான விவரங்களை அளித்தால் எந்த விகிதத்திலும் TDS ஐக் கழிக்க முடியும். ஓர் ஊழியரின் வருமானத்தில் 20% வரி பிடித்தம் செய்யப்படும் அல்லது அதைவிட அதிக விகிதத்தில் டிடிஎஸ்., பிடித்தம் செய்யப்படும்.

ஆதாருடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் ₹10000 அபராதம்!

ஆதார் எண் பான் எண் இணைப்பது எப்படி?

ஆதார் எண் பான் எண் இணைக்க… செய்ய வேண்டியவை..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.